Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சசிகுமாரரின் அடுத்த படம்: தங்கம் பா சரவணன் இயக்குகிறார்

நடிகர் சசிகுமார், குடும்பத்தோடு கொண்டாடும், கிராமப்புறம் சார்ந்த திரைப்படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளார். சிறந்த பொழுது போக்கை தரும் இந்த வகை திரைப் படங்கள், எப்போதும் வர்த்தக வட்டாரங்களிலும்
லாபத்தை பெற்று தந்துவிடுகிறது. இயற்கையாகவே, சசிகுமார் இத்தகைய கிராமப்புற கதைகளின் வெற்றி முகத்துக்கு சொந்தக்காரராக மாறி விட்டார். அத்தகைய படங்களின் வாயிலாக, பல இயக்குநர்களின் வெற்றிப்பயணத்திற்கு ஒரு படிக்கட்டாகவும் அவர் இருந்துள்ளார். ஒரு இயக்குநரின் கதையையும், அவரது திறனையும் மதிப்பிடுவதில் அவர் கில்லாடியாக இருப்பது, தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. எஸ் கே எல் எஸ் கேலக்ஸி மால்ப்ரொடக்‌ஷன்    ( SKLS Galaxy Mall Productions) ஈ .மோகன் தயாரிப்பில்
நடிகர் சசிகுமார் நடிக்கும் அடுத்த படமான “புரடக்‌சன் நம்பர்.2” படத்தை இயக்கும் இயக்குநர் தங்கம் பா சரவணன் இந்த வரிசையில் தற்போது லேட்டஸ்டாக இணைந்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் தங்கம் பா.சரவணன் கூறியதாவது:

உலகம் முழுக்க அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் படமாக இப்படம் இருக்கும். இது ஆக்சன், செண்டிமெண்ட் மற்றும் அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்த திரைப்படமாக இருக்கும். இந்த திரைக்கதையை நம்பி, இப்படத்தை படமாக்க சம்மதம் தந்ததற்காக தயாரிப்பாளர் மோகன் சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும் படத்தின் எந்த ஒரு விசயத்திலும் அவர் ஒருபோதும் தலையிடவில்லை, இது என்னைப் போன்ற வளரும் இயக்கு நருக்கு ஒரு வரப்பிரசாதம். சசிகுமார் சார் என்னுடைய முந்தைய படமான ‘அஞ்சல’ படம் பார்த்து, என்னுடைய முயற்சியை முழுமையாக பாராட்டினார். அவரின் வாழ்த்துக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். அவர் இந்த திரைக் கதையை கேட்டபோது, எல்லா தரப்பு ரசிகர்களிடமும் நிச்சயம் இப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் மிகுந்த நம்பிக்கை வைத்தார். சசிகுமார் சாரின் கேரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. அதை தாண்டியும், திரைக்கதையில் ஏராளமான ஆச்சர்யங் களும் உள்ளது. இவையனைத்தும் இணைந்து ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் ஒரு அருமையான படைப்பாக இப்படம் இருக்கும்.

கடந்த வருட வெற்றித் திரைப்படமான ‘அஞ்சல’ படத்தின் தரமான உள்ளடக்கத் திற்காக விமர்சன ரீதியாகப் பாராட்டப் பட்ட இயக்குநர் தங்கம் பா சரவணன், இப்படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்தை    எஸ் கே எல் எஸ் கேலக்ஸி மால்ப்ரொடக்‌ஷன் ஈ. மோகன் தயாரிக்கிறார்.

இப்பஃபத்தின் இசை  சாம் சி.எஸ்.  ஒளிப்பதிவு  ராமி.   எடிட்டர் ஷான்  லோகேஷ். கலை வைரபாலன். ஸ்டன்ட் விக்கி. காஸ்ட்யூமர்  ரமேஷ். .மேக்கப் தினகரன். ஸ்டில்ஸ் குமரேசன். ஸ்டோரி போர்ட் சந்திரன். எக்ஸிகியூடிவ் புரட்யூசர்  என்.பாலகோபி.  புராஜக்ட் டிசைனர் என்.பி.கொளஞ்சி,  புரடக்சன் கண்ட் ரோலர் எம்.முரளிதரன் மக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா & ரேகா D one ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அனன்யா நாகல்லா, கருணாஸ், ராஜ் மோகன், அபிராமி ராகுல் பவணன், ஜி.எம் சுந்தர், ஜோ மல்லூரி, தயானந்த் ரெட்டி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

Related posts

Wrapped up Major Schedule of 7Days 6Nights

Jai Chandran

தமிழ்நாடு திரைப்பட பத்திரிகையாளர் சங்க புதிய நிர்வாகிகள் விவரம்

Jai Chandran

Indian Fans Rejoice , Avatar : The way of water

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend