Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மவுன மொழிகள் (பட விமர்சனம் )

படம்: மவுன மொழிகள்

நடிப்பு: ஷாகிர் மனோ, ஸ்ரீமன் அர்ச்சனா சிங், திவ்யா நாகேஷ், தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், இளவரசன், அஞ்சலி தேவி, அர்ஜுன், விஜய் கணேஷ்

தயாரிப்பு: பி. பாலச்சந்திரன், பி ஸ்ரீமன்

இசை: இளந்திரையன்

ஒளிப்பதிவு: எம் ஜி ராய்

இயக்கம்: ஏசி சௌந்தர்

பிஆர்ஓ : சரண்

கதை : விளம்பர நிறுவனம் நடத்தும் கதிர் (ஷாகிர்) பெண்கள் அழகி போட்டியில் வெற்றி பெறும் பவித்ராவை (அர்ச்சனா சிங் ) தனது விளம்பர படத்தில் நடிக்க கேட்கிறார். ஆனால் அவர் கதிரை அவமானப்படுத்தி அனுப்புகிறார். பவித்ரா எதிர்பாராத விபத்தில் சிக்கி படுகாயம் அடைகிறார். அவருக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றுகிறார் கதிர். பின்னர் இருவரும் சந்திக்கும்போது பவித்ராவிடம் தனது காதலை கதிர் வெளிப்படுத்த அவர் ஏற்க மறுக்கிறார். இதற்கிடையில் கதிரை இன்னொரு பெண் காதலிக்கிறாள். இவர்களுக்கிடையில் நடக்கும் முக்கோண காதல் எங்கே போய் முடிகிறது என்பது கிளைமாக்ஸ்.

காதலுக்கு அழகு முக்கியமில்லை அன்பு தான் முக்கியம் என்ற கருவுடன் இப்படம் உருவாகியிருக் கிறது.

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் ஷாகிர் ஹீரோவாக நடித்திருக்கிறார். நடிப்பிலும் வசனத்திலும் பாஸ் மார்க் வாங்கி மனதில் இடம் பிடிக்கிறார் ஷாகிர்.
அர்ச்சனா சிங்கிடம் ஷாகிர் காதலலை வெளிப்படுத்தி பல்பு வாங்குவதும், அதேபோல் ஷாகிரிடம் திவ்யா நாகேஷ் காதலிக்க வற்புறுத்தி கேட்டு திவ்யா பல்பு வாங்குவதும் ஏதோ பெரிய ட்விஸ்ட் பின்னால் இருக்கிறது என்பது போல் பிம்பத்தை ஏற்படுத்துகிறது. ஷாகிர் ஆக்சன் காட்சிகளை வேகம் காட்டியிருக்கிறார்

அர்ச்சனா சிங் அழகான காதலியாக இருந்தாலும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும் பாத்திரமாக மாறுவது திடீர் ஷாக்.
பாய்பிரண்ட்களுடன் ஊர் சுற்றிவிட்டு அவர்களை கழட்டி விடும் திவ்யா நாகேஷ் திடீரென்று வில்லியாக மாறுவது என்ன செய்ய காத்திருக்கிறாரோ என்ற திக்கிக் ஏற்படுத்துகிறார்.

காமெடிக்கு பயன்பட்டிருக்கிறார் அர்ஜுன். இரண்டாவது ஹீரோவாக ஸ்ரீமன் இரண்டு காட்சிகளில் வருகிறார். இவரால் அழுத்தமான வேடங்களில் நடிக்க முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார். மேலும் தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், இளவரசன், அஞ்சலி தேவி, அர்ஜுன், விஜய் கணேஷ் நடித்திருக்கிறார்கள்.

பி. பாலச்சந்திரன், பி ஸ்ரீமன் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இளந்திரையன் இசை
எம் ஜி ராய் ஒளிப்பதிவு ஓகே.

காதல் அழகு சம்பந்தப்பட்டதல்ல என்ற கருத்தை இயக்குனர் ஏசி சௌந்தர் சொல்ல வந்தாலும் அதை சமுதாய மன நோயாளிகளின் மன பாதிப்பாக காட்டியிருப்பது செண்டிமெண்ட் டச்.

மவுன மொழிகள் – சித்தம் கலங்கியவர்களின் குரலாக ஒலிக்கிறது.

Review by K Jayachandhiran www.trendingcinemasnow.com

Related posts

தேர்தல்: இரவு நேரத்தில் நாடகங்கள் நடத்தலாமா

Jai Chandran

ஹே சினாமிகா ( பட விமர்சனம்)

Jai Chandran

காப்பான் பட பாணியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு?

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend