Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நிறம் (பட விமர்சனம்)

படம்: நிறம்

நடிப்பு: முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ராணி, தான்யா ஹோப், சுரேகா வாணி, நிதின் சத்யா, ஸ்ரீஜித் ரவி, சுரேஷ் சக்கரவர்த்தி, கஜராஜ்

தயாரிப்பு: கே பிந்து மாதவி

இசை: டி இமான்

ஒளிப்பதிவு: சாண்டானியோ டெர் ஜியோ

இயக்கம்: பலராம் கிருஷ்ணா

பிஆர்ஓ : AIM சதீஷ்

கதை: டாக்டர் க்ரிஷும் (முகேன் ராவ் ), கீர்த்தனா (பிரீத்தி அஸ்வராணி) காதலிக்கின்றனர். திடீரென்று இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிக்கின்றனர். அன்றைய தினமே கீர்த்தனா காணாமல் போகிறார். மகள் மாயமானது பற்றி தந்தை போலீசில் புகார் கொடுக்கிறார். டாக்டர் க்ரிசை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். அவருக்கும் என்ன நடந்தது என்று தெரியாது எனச் சொல்கிறார். மாயமான கீர்த்தனா கதி என்னவானது? அதற்குப் பின்னால் உள்ள மர்மம் என்ன என்பதற்கு பரபரப்பு பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.

மருத்துவ பின்னணியில் இப்படத்தின் கதை திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான உறுப்பு திருட்டு என்ற கோணத்தில் இல்லாமல் மாறுபட்ட கோணத்தில் கதையை வடிவமைத்திருப்பது கிளைமாக்ஸ் வரை படத்தை பரபரப்புடன் நகர்த்தி செல்கிறது.

ப்ரீத்தி அஸ்ராணி துடுக்குத்தனமான அதேசமயம் சேவை குணம் கொண்ட பாத்திரத்தில் நடித்திருக்கிறார். யாராவது பெண்ணிடம் முரண்டு செய்தால் அவர்களை பளார் என்று அறைந்து தவறை தட்டி கேட்கும் தைரியமான பெண்ணாக வருகிறார். அந்த செயலே பல்வேறு சிக்கல்களில் அவரை ஆழ்த்துவது கதையின் திருப்பத்திற்கு உதவியிருக்கிறது.

ப்ரீத்தி அஸ்ராணியின் காதலனாக வரும் முகேன் ராவ் தொடக்கத்தில் காதல் லீலைகள் செய்துக் கொண்டிருந்தாலும் இரண்டாம் பாதியில் ஆக்ஷன் ஹீரோவாக கெத்துகாட்டுகிறார்.

தான்யா ஹோப் மருத்துவமனை எம் டி சுரேகா வாணி மகளாக வருகிறார். தான்யாவுக்கு பெரிதாக வேலை இல்லாவிட்டாலும் பிரீத்தி அஸ்ராணியை கண்டுபிடிக்கும் துருப்புச் சீட்டாகாக மாறுகிறார்.

நீண்ட நாட்களாக தமிழில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நிதின் சத்யா இந்த படத்தில் அசத்தலான ரீ என்ட்ரி கொடுத்து பிரதான வில்லனாக நடித்திருக்கிறார். ஹீரோ, மற்றும் ஹீரோ நண்பராக நடித்து வந்த நிதின் சத்யா எப்படி வில்லன் வேடத்தை சமாளிக்க போகிறார் என்று எண்ணும் நிலையில் ஆக்சன் காட்சிககளில் களம் இறங்கி வில்லத்தனத்தை நிறைவு செய்திருக்கிறார். இனி அடிக்கடி நிதினை திரையில் பார்க்கலாம்.

படத்தை கே பிந்து மாதவி தயாரித்திருக்கிறார்.

மெலடிக்கு பெயர் பெற்ற டி இமான் இப்படத்தில் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

சாண்டானியோ டெர்ஜியோ கண்ணாடி பிரேம் போல் காட்சிகளை பளிச்சென ஒளிப்பதிவு செய்துள்ளார்

இயக்குனர் பலராம் கிருஷ்ணா ஜேம்ஸ்பாண்ட் டெக்னிக்குடன் படத்தை இயக்கியிருப்பது ரசிகர்களை இறுதிவரை இருக்கையில் கட்டி போடுகிறது.

நிறம் – மருத்துவ பின்னணியில் ஒரு ஆக்சன் காதல் திரில்லர்.

Review by K Jayachandhiran www.trendingcinemasnow.com

Related posts

Mystery loaded teaser of Dejavu is out now.

Jai Chandran

யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள்..

Jai Chandran

‘மீம்’ கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend