Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் விமர்சனம்

சிட்டுக்குறிஞ்சி (படவிமர்சனம் )

படம்: சிட்டுக்குறிஞ்சி

நடிப்பு: ரஜித் மேனன், தீப்ஷிகா, நக்ஷா சரண், ஸ்ரீராம் கார்த்திக், வி.ஜே பிரபு

தயாரிப்பு: டி ஏ ஜூட் ஆனந்த்

இசை: மாறா

ஒளிப்பதிவு : பிரான்சிஸ் ராஜ்குமார்

இயக்கம்: வி ஜே மீனாட்சி சுந்தரம்

டி ஆர் ஓ : ரியாஸ் கே அஹமத், பாரஸ் ரியாஸ்

கதை: கேரளாவிலலிருந்து கொடைக்கானல் காட்டுப்பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக வரும் நபரை (ரஜித் மேனன் ) காட்டு பங்களாவின் சாவி இல்லாத நிலையில் வேறொரு பெண் வீட்டில் தங்க வைக்கிறார். அந்தப் பெண், வீட்டுக்கு வந்த நபரை நன்கு உபசரித்து கவனிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் திருமணம் ஆனவர் என்று தெரிகிறது. இந்நிலையில் ஊருக்கு செல்லும் நபர் மீண்டும் திரும்பி வந்து பார்க்கும்போது குறிப்பிட்ட இடத்தில் எல்லாமே மாறி கிடக்கிறது. அங்கிருந்தவர்கள் யாருமே இந்த நபரை தங்களுக்கு தெரியாது என்று கூறுகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்பதை இப்படி கூட நடக்குமா என்ற ஆச்சரியத்துடன் விளக்குகிறது கிளைமாக்ஸ்.

மலையாளி நபராக ரஜித் மேனன் நடித்திருக்கிறார். இயல்பான நடிப்பில் காட்சிகளை இயல்பாகவே நிகழ்த்தி செல்லும் அவர் தன்னை அன்புடன் கவனித்து உபசரிக்கும் பெண் தீப்ஷிகா மீது காதல் கொள்வது இயற்கை என்றாலும் திடீரென்று அந்தப் பெண் தான் வேறு ஒருவரின் மனைவி என்று சொல்வதும்ர ரஜித் ஷாக் ஆவதும் இந்த கதைக்கு பின்னணியில் போனஜென்ம கதை ஒன்று இருக்கிறது என்ற மர்மத்தை யூகிக்க முடியவில்லை.

ஊர் பெரியவர் ஜி எம் குமார் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் நம்பியார் போல் ஒரு சஸ்பென்ஸ் தருகிறார். கீரைக்காரியாக வரும் நடிகை, ரஜித் நண்பராக வரும் வி ஜே பப்பு ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.

கதை எழுதும் ஸ்ரீராம் கார்த்திக், அவரது கதைக்கு முடிவுரை எழுத உதவும் தீப்ஷிகா இன்னொரு எபிசோடுக்கு ஸ்ருதி சேர்க்கிறார்கள்.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததுபோல் தெரிந்தாலும் அவைகளை ஒரு புள்ளியில் இயக்குனர் வி ஜே மீனாட்சி சுந்தரம் இணைத்து ஆணவ கொலைகளின் அவலங்களை புதிய கோணத்தில் மர்ம நாவல் படிக்கும் பாணியில் சொல்லி இருப்பது ஆர்வத்தை தூண்டுகிறது.

பிரான்சிஸ் ராஜ்குமாரின் கேமரா காட்டுப் பகுதிகளில் பசுமை மாறாத குறிஞ்சி நிலங்களை காட்டி மனதை மயக்குகிறது.

இசை அமைப்பாளர் மாறா இசை இன்னும் கூட மாறுபட்டு இருந்திருக்கலாம்.

சிட்டுக்குறிஞ்சி என்றால் என்ன? சிட்டு பறவைகள் நிறைந்த நிலம்தான் சிட்டுக்குறிஞ்சி என்ற டைட்டிலாக மாறியிருப்பது தமிழ் ரசனையின் ஒரு துளி.

சிட்டுக்குறிஞ்சி – மறு ஜென்ம நினைவுகள்..

Review by K Jayachandhiran www.trendingcinemasnow.com

Related posts

கூல் சுரேஷ், செந்தில் நடிக்கும் கேங்ஸ்டர் படம் தொடக்கம்

Jai Chandran

மகன் அதீப்புடன் அசத்தும் சிம்ரன்..

Jai Chandran

ஆதார் கேட்டு அலையும் ஒரு கிராமத்தின் உண்மை கதை அட்ரஸ்: இயக்குனர் இராஜமோகன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend