Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ பாடல் வெளியிட்ட சாந்தனு..

அமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்!.

அப்பாவின் அருமையையும், அவரது அன்பையும், பிரிவால் ஏற்படும் ஏக்கத்தையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. கேட்போரின் மனதை நெகிழச் செய்யும் உணர்வுப்பூர்வமான மெலடிப் பாடலாக அமைந்துள்ள ‘அப்பா உன் ஆராரிரோ’, தந்தை – மகன் உறவின் உணர்வுகளை இசையின் வழியே அழகாகக் கடத்துகிறது.

இப்பாடலுக்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். மித்துன் மாணிக்கம் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகர் சுந்தரய்யர் மற்றும் வெங்கட்ரமணன் இணைந்து இப்பாடலைப் பாடியிருக்கிறார்கள். தந்தையின் அன்பையும், குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் மையப்படுத்திய இப்பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள்தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜிஜேந்திரன் V படத்தொகுப்புப் பணிகளையும், C. K. முஜிபுர் ரஹ்மான் கலை இயக்கப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, குடும்பப் பின்னணியில் ஃபேமிலி டிராமா, ஆக்‌ஷன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

மெக்கானிக் பிக்சர்ஸ் (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் மித்துன் மாணிக்கம் தயாரித்துள்ள இப்படத்தை, மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP (Millennials Movie Production LLP) நிறுவனம் சார்பில் முஹம்மத் கனி ஃபைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தைத் தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘தீராகணம்’ வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாடலான ‘அப்பா உன் ஆராரிரோ’ குடும்ப உறவுகளின் மற்றொரு உணர்வுப்பூர்வமான பக்கத்தை வெளிப்படுத்துகிறது. வரும் டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்தப் பாடல் மேலும் அதிகரித்துள்ளது.

Related posts

*Debut filmmaker Sri Vetri’s ‘Narkarappor’

Jai Chandran

ஜாங்கோ பட இயக்குனர் உருக்கம்

Jai Chandran

தலைநகரம்2 ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend