பாடகர் எஸ்பி.பால சுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலை கவலைக்கிடமானது.
தீவிர சிகிசைக்கு பிறகு உடல்நிலை தேறி வருவதாக மகன் சரண் கூறினார். இன்று மாலையும் தந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாக கூறினார். அதன்பிறகு சிறிது நேரத்தில் எஸ் பி பி உடல் நிலை மீண்டும் கவலைக்கிட மாக இருப்பதாக மருத்துவ மனை தகவல் வெளியிட்டது. இதனால் ரசிகர்களிடையே மீண்டும் சோகம் குடி கொண் டது.
எஸ்பிபிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிக்சை அளித்து வருகின்றனர். உடல் நிலையை அருகிருந்து கண்காணித்து வருகின் றனர்.
முன்னதாக எஸ் பி பி உடல் நலமடைய ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளைய ராஜா, வைரமுத்து, ஏ ஆர் ரஹ்மான்., அனிருத் குஷ்பூ என ஏராளமான திரையுல கினர் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வீடியோ வெளி யிட்டனர்.