Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கொரோனா தொற்று அதிகரிப்பால் அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை: மீண்டும் லாக்டவுன்?

கொரோனா தொற்று சீனாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவியது. பின்னர் படிப்படியாக அது உலகின் பlல்வேறு நாடுகளுக்கு பரவியது. அமெரிக்கா., இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பலவேறு நாடுகள் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்ப்பட்டது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்ப்பட்டனர். லட்சக்கணக்கனவர்கள் பலியாகினர்.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவியதையடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. சுமார் 8 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு மற்றும் கட்டுபாடுகள் தளர்வுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முன்னதாக பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். செப்டம்பர் மாதத்துக்கு பிரகு கொரோனா பாதிப்பு குறைந்த்தையடுத்து  லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மெல்ல மெல்ல இயல்பு வாழ்கை திரும்பியது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதாக சுகாதார துறை புள்ளிவிவஎரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மகாரஷ்டிராவில் தொற்று பாதிப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியா முழுவதும் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டு அந்தந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மர்றும் பரவல் குறித்து கேட்டறிந்ததுடன் மாநிலங்களுக்கு தக்க உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று உறுதி அளித்தார்.

தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால் அவருக்கு பதிலாக சுகாதார்துரை செயலாலர்  டாக்டர் ராதகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கல்ந்துகொண்டு தமிழ்நாட்டில் கொரோனா நில்வரம் பற்றி தெரிவித்தனர்.

இதற்கிடையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வேகமாக பரவிவருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால் மீண்டும் லாக்டவுன் என்பது வதந்தித்தான் நம்பப வேண்டாமென்று மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறது அரசு சுகாதார துறை.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை அரசு இலவசமாக மக்களுக்கு செலுத்தி வருகிறது. தற்போது அந்த பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Jai Chandran

Netflix Unveils the Trailer of ‘Pyaar Prema Kalyanam..

Jai Chandran

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வாசிப்பு விழா – கபிலன்வைரமுத்து நூல்கள் தேர்வு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend