Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஜெடூசி ( பட விமர்சனம்)

படம்: ஜெடூசி

நடிப்பு: ஸ்ரீதர், ஸ்வேதா, சினி யுதன், பிளாக் பாண்டி, பவா செல்லதுரை, ஜெயந்தி மாலா, ஏ வெங்கடேஷ், அருவி மதன், அசோக் பாண்டியன்

தயாரிப்பு:நட்ராஜ் ஏகாம்பரம் விஜயசாந்தி ஸ்ரீதர்

இசை: விக்னேஸ்வரன்

ஒளிப்பதிவு: நாகஅர்ஜுன் வி எஸ்

இயக்கம்: நட்ராஜ் ஏகாம்பரம்

பிஆர்ஓ : சரண்

கதை : கல்லூரி மாணவ மாணவிகள் சிலரும், கல்லூரி துணை முதல்வர், பெண் பேராசிரியரூம் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் படை களத்தில் இறங்குகிறது. கொலைகாரானை அதிரடியாக போலீஸ் எப்படி கைது செய்கிறது? கொலைக்கான பின்னணி என்ன என்பதற்கெல்லாம் பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

நகரில் கொலை நடப்பது சர்வ சாதாரணமாக இப்போது ஆகிவிட்டது என பத்திரிகைகளில் செய்தி வருவது போல் இந்த படத்திலும் கொலை என்பது சர்வ சாதாரணமாக மர்ம மனிதன் ஒருவனால் நிகழ்த்தப்படுவது கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போன்ற ஒரு தொடர் கொலைகளாக அமைவது புரியாத புதிராகவே நகர்கிறது.

படத்தின் இரண்டாம் பாதி நெருங்கும் நேரத்தில் கொலையாளியை போலீஸ் துரத்தி சென்று பிடித்து கோர்ட்டில் நிறுத்தும்போது இந்த நபரா கொலை செய்தார் என்ற ஒரு ஆச்சரியத்தையும், கேள்வியையும் எழுப்புகிறது.

எதற்காக கொலைகளை செய்தாய் என்று போலீஸ் கேட்கும்போது அதை நான் கோர்ட்டில் சொல்கிறேன் என்று கொலைகாரன் சஸ்பென்சாக விடும்போது கோர்ட் காட்சியில் ஒரு பிளாஷ்பேக் இருப்பதை யூகிக்க முடிகிறது.

மலைவாழ் மக்கள் கிராமத்துக்குள் பிளாஷ்பேக் நுழைந்ததும் நெஞ்சில் தென்றல் காற்று சில்லென வீசு தொடங்குகிறது.
மலைவாழ் பெண்ணாக வரும் ஸ்வேதாவுக்கு கேமரா ஃபேஸ் என்று சொல்வார்களே அது போன்ற ஒரு அழகான முகத்தோற்றம் மட்டுமல்ல இளவட்டங்களை கவர்ந்திழுக்கும் கட்டுக்கோப்பான உடற்கட்டும் பெரிய பிளஸ்.

ஹீரோவாக ஸ்ரீதர் நடித்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் இவர்தான் சூத்திரதாரி என்பதை கணிக்க முடியாதளவுக்கு அவரது அப்பாவித்தனமான முகம் முதல் பாதி வரை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காமல் செல்கிறது, இடைவேளைக்குப் பிறகு அவரா இவர் என்று கேட்கும் அளவுக்கு முரட்டுத்தனமான பருத்திவீரன் கார்த்தி போல் தடாலடி செயல்களை செய்து பரபரப்பு ஏற்படுத்துகிறார்.

சினி யுதன், பிளாக் பாண்டி, பவா செல்லதுரை, ஜெயந்தி மாலா, ஏ வெங்கடேஷ், அருவி மதன், அசோக் பாண்டியன் ஆகியோரும் நடித்திருக்கி றார்கள் .உயர்   போலீஸ்  அதிகாரியாக நட்ராஜ் ஏகாம்பரம் கச்சிதமாக வந்து செல்கிறார்

நட்ராஜ் ஏகாம்பரம் விஜயசாந்தி ஸ்ரீதர் படத்தை தயாரித்திருக்கின்றனர்.

விக்னேஸ்வரன் இசையும்,
நாகஅர்ஜுன் வி .எஸ். ஒளிப்பதிவும் ஏமாற்றவில்லை.

இது போன்ற பழிவாங்கும் கதைகள் நிறைய வந்திருந்தாலும் இந்த படத்தை பொருத்தவரை இயக்குனர் நட்ராஜ் ஏகாம்பரம் போலீஸ் அதிரடி கதையாக மாற்றி அதில் சஸ்பென்ஸ்களை வைத்து திரைக்கதை அமைத்துதிருப்பது. போரடிக்காமல் காட்சிகளை கொண்டு செல்கிறது. ஒரு சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் காட்சிகளைப் பொறுத்தவரை காம்ப்ரமைஸ் செய்யாமல் பக்காவாக இயக்கியிருப்பது லாஜிக் மீறல்களை செயலிழக்க வைக்கிறது.

ஜெடூசி – கொடுவாளாக மாறும் பெண்களின் கொண்டை ஊசி.

Review by K Jayachandhiran www.trendingcinemasnow.com

Related posts

விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையை மணக்கிறார்..

Jai Chandran

Friendship Movie Wishes ActionKingArjun

Jai Chandran

Debutant Actor Aadhav joins the Team of Kettavannu Peru eduttha nallavan’,

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend