Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட Dr B Nail Galaxy- பிரியா தயாநிதி மாறன் திறப்பு..

சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட Dr B Nail Galaxy…பிரியா தயாநிதி மாறன் திறந்து வைத்தார்!*

நக அலங்காரம் மற்றும் நகப் பராமரிப்புக்கான பிரத்யேக மையமான Dr. B Nail Galaxy, சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள Bevell மெடி சலூன், டாக்டர் பி 360 டெர்மட்டாலஜி மையத்தில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவை பிரியா தயாநிதி மாறன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அஷ்வின் தியாகராஜன், நடிகர் வசந்த் ரவி, நடிகை ரித்விகா, பாடகி ஸ்ரீநிஷா ஜெயசீலன், ஏஞ்சலின் மற்றும் VB வேர்ல்ட் உணவகக் குழுமத்தின் உரிமையாளர் ஸ்வர்ணா ரவி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் முக்கிய விருந்தினர்களும் பங்கேற்றனர். மேலும், பல்வேறு நடிகர்கள், சமூக வலைதளப் பிரபலங்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சென்னையின் தொழிலதிபர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

பிரபல தோல் மருத்துவர் டாக்டர் பைரவி செந்தில் அவர்களால் தொடங்கப்பட்டுள்ள டாக்டர் பி நெயில் கேலக்ஸி, நக அழகுப் பராமரிப்பில் ஒரு புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது. படைப்பாற்றல் மிக்க நெயில் ஆர்ட் சேவைகளுடன், இயற்கையான நகங்களைப் பராமரிப்பதற்கான தொழில்முறை சேவைகள் மற்றும் தோல் மருத்துவரின் ஆலோசனையுடன் கூடிய பரிசோதனை வசதிகளையும் ஒரே இடத்தில் வழங்குகிறது. அழகியல், சுகாதாரம் மற்றும் மருத்துவ நிபுணத்துவம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முழுமையான நகப் பராமரிப்பு அனுபவத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

இந்தத் தொடக்க விழாவின் மற்றொரு முக்கிய அம்சமாக, AAVEDERM Dr. B Onychoshield – Total Regenerative Nail Serum என்ற புதிய நகப் பராமரிப்பு சீரம் அறிமுகப்படுத்தப்பட்டது. தோல் மருத்துவ நிபுணரின் வழிகாட்டுதலுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த சீரம், வறண்ட, எளிதில் உடையக்கூடிய மற்றும் சேதமடைந்த தோற்றமுடைய கை, கால் நகங்களின் பராமரிப்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நானோ தொழில்நுட்ப முறையில் உள்ளடக்கப்பட்ட Tea tree oil, கிராம்பு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், D-Panthenol மற்றும் வெள்ளைத் தேயிலைச் சாறு ஆகிய உட்பொருட்களைக் கொண்டு இந்த சீரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது நகங்களுக்கு ஈரப்பதத்தை வழங்கி, அவற்றின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், வறண்ட நகச் சுற்றுப்புறத் தோலைப் பராமரிக்கவும், நகங்களின் மேற்பரப்பை மென்மையாகத் தோற்றமளிக்கச் செய்யவும் உதவுகிறது.

தொழில்முறை அழகுப் பராமரிப்பு சேவைகளுடன் தோல் மருத்துவ நிபுணத்துவத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தனது தொலைநோக்குப் பார்வையின் அடுத்தகட்டமாக டாக்டர் பைரவி செந்தில் இந்த டாக்டர் பி நெயில் கேலக்ஸியை உருவாக்கியுள்ளார். நக அலங்காரக் கலை, இயற்கையான நகப் பராமரிப்பு மற்றும் தனிப்பட்ட கவனிப்பு ஆகியவற்றுக்கு என பிரத்யேகமான மையமாக இது செயல்பட உள்ளது.

டாக்டர் பி நெயில் கேலக்ஸி,
Bevell மெடி சலூன், டாக்டர் பி 360 டெர்மட்டாலஜி எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்,
ஆழ்வார்பேட்டை, சென்னை.

தொடர்புக்கு: 96260 22222
இணையதளம்: www.drbhairavisenthil.com

Related posts

பிரபு , வெற்றி நடிக்கும் ராஜபுத்திரன் ஆடியோ விழா

Jai Chandran

Pan-India mega project Radhe Shyaam unveils heart-touching song

Jai Chandran

“Thira Nee Endhan Tharani Thira Nee” from KD: The Devil..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend