படம்: ரெட்ரோ
நடிப்பு: சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், கருணாகரன், பிரகாஷ்ராஜ், சுஜித்சங்கர், சுவாசிகா, விது அவினாஷ்
தயாரிப்பு: ஜோதிகா சூர்யா
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ்யாஸ் கிருஷ்ணா
இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ்
ரிலீஸ்: சக்தி பிலிம். ஃபேக்டரி
பி ஆர் ஒ,: யுவராஜ், சதீஷ் S2
புத்தர் கோயிலில் அனாதையாக விடப்பட்ட கைக்குழந்தையை எடுத்து வளர்க்கிரார் ஜோ ஜு ஜார்ஜின் மனைவி. ஆனால் அந்த குழந்தையை தத்து மகனாக கூட ஏற்காமல் அடியாள்போல் பார்க்கிறார் ஜோ ஜு . எப்படியும் தன்னை ஜோ ஜு கொன்று விடுவார் என்று தெரிந்து அவர் கடத்தி வரும் தங்க மீன்கள் என்ற பொருளை கடத்தி மறைத்து வைக்கிறார் வளர்ப்பு மகன் பாரி. இந்நிலையில் பாரியின் காதலியை ஜோ ஜு கொல்ல முயலும்போது அவரது கையை பாரி வெட்டுகிறார். கலக்கம் அடைந்த காதலி ஊரை விட்டு செல்கிறார். அவரை தேடி கண்டுபிடித்து மணக்க எண்ணும் பாரி அடிதடியை கைவிட்டு ஸ்டாண்டப் காமெடி யனாக மாறுகிறார். ஆனால் சூழ்நிலை அவரை மீண்டும் கோபக்காரனாக மாற்றுகிறது. அதன் பிறகு எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்கின்றன. இதன் முடிவு என்னவாகிறது என்பது கிளைமாக்ஸ்.
மாரி என்ற மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் சகட்டுமேனிக்கு ஸ்டைல் காட்டி நடித்திருக்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்ஷன் காட்சிகளில் அதிரிபுதிரி செய்திருக்கிறார்.
பூஜாவை மணக்க முடிவு செய்து திருமண விழா ஏற்பாடு செய்து ஆட்டம் பாட்டம் என அந்தர் செய்யும் சூர்யா இடையிடையே ஜோ ஜு ஜார்ஜுடன் நடத்தும் மோதல், காட்சியை விறுவிறுப்பாக்குகிறது.
அடுத்த கதைக்களம் அந்தமானில் தொடங்கியதும் பிரிட்டிஷ் ஆட்சி காளத்துக்கே கதை நகர்ந்து விடுகிறது. அங்கு கல்ட் சண்டை வீரராக மாறும் சூர்யா தனி ஆளாக மோதுவது அரங்கில் விசில் பறக்க வைக்கிறது.
பூஜா ஹெக்டே தனது நவநாகரீக ஆடைகளை துறந்து எளிமையான சேலையுடன் வந்து நடிப்பை வெளிப்படுத்து கிறார்.
சூர்யா ஆவேசம் கொள்ளும் நேரத்தில் அவரது கோபத்துக்கு பூஜா அணை போட நினைப்பதும் ஆனாலும் அடங்காத கோபக்காரனாக சூர்யா கொந்ததளிப்பது அரங்கில் ஆக்ஷன் அனல் பறக்க வைக்கிறது
ஜோதிகா சூர்யா தயாரித்திருக்கிறார்.
ஜிகிர்தண்டா, பிட்ஸா படங்களுக்கு பிறகு மாறுபட்ட கதைக்களத்தை கையிலெடுத்து அதை வெற்றிகரமாக இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
சந்தோஷ் நாராயணன் இசை ஸ்பெஷல் இடத்தை பிடிக்கிறது. அதேபோல் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு புது அனுபவத்தை தருகிறது.
ரெட்ரோ – சூர்யாவின் மாறுபட்ட ஸ்டைலுடன் கூடிய வித்தியாசமான படைப்பு.