படம்: தண்ணி வண்டி
நடிப்பு: உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி, தம்பி ரமையா, பால சரவணன், விதுலேகா, தேவதர்ஷினி, வினுதா லால், ஜார்ஜ், மதுரை முத்து.
தயாரிப்பு: ஜி.,சரவணன்
இசை: மோசஸ்
ஒளிப்பதிவு: எஸ்.என்.வெங்கட்
இயக்கம்: மனிகா வித்யா
பி. ஆர். ஒ : மவுனம் ரவி, மணவை புவன்
மதுரையில் தேவையான இடங்களுக்கு வண்டியில் தண்ணீர் கொண்டு சென்று ஊற்றும் வேலை செய்கிறார் சுந்தர மகாலிங்கம். அதே ஊரில் பவர் இஸ்த்ரி கடை நடத்துகிறார் தாமினி. இவர் மீது காதல் கொள்கிறார் மகாலிங்கம். அந்த ஊரில் புதிதாக ஆர் டி ஓ அதிகாரியாக பொறுபேற்கும் பெண் அதிகாரி தவறு யார் செய்தாலும் தட்டிக் கேட்கிறார். ஆனால் அவருக்கு ஆண்களிடம் வீக்னஸ் அதிகம். தாமினியின் தோழிக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் பெண் அதிகாரி தனிமையிலிருப்பதை பார்க்கிறார் தாமினி. இந்த விஷயம் அம்பலத்துக்கு வருகிறது. கண்டிப்பான பெண் அதிகாரிக்கு இப்படியொரு வீக்னஸ் இருப்பதை ஊர் அறியச் செய்ததால் ஆத்திரம் அடைகிறார். தன்னை இழிவுபடுத்தியது தாமினி தான் என்று எண்ணி அவரை துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார். ஒரு கட்டத்தில் தாமினியை போலீஸ் மூலம் கடத்தி மிரட்டுகிறார். இதையறிந்த மகாலிங்கம் பாய்ந்து வந்து தாமினியை காப்பாற்றுகிறான். ஆனாலும் பிரச்னை முடியவில்லை. ஆத்திரம் அடையும் பெண் அதிகாரி மீண்டும் தாமினி உள்ளிட்டவர்களை கொலை செய்ய முடிவு செய்கிறார். இதன் முடிவு என்ன என்பதை கிளைமாக்ஸ் விளக்குகிறது.
ஹீரோ சுந்தர மகாலிங்கமாக உமபாதி ராமையா நடித்திருக்கிறார். ஜெயம் ரவிபோல் ஆறடி உயரத்தில் வரும் உமாபதி நடிப்பில் நல்ல தேர்ச்சி பெர்றிருக்கிறார். தன்னுடய நண்பன் பால சரவணனுடன் சேர்ந்து காமெடி கலாட்டாவும் செய்கிறார் ஆக்ஷன் காட்சிகள், நடன காட்சியிலும் உமாபதி பக்கவாக நடித்து அசத்துகிறார்.
தாமினியாக வரும் சம்ஸ்கிருதி அடிக்கடி புன்னகை சிந்தி வசியம் செய்கிறார். இலகுவான கதாபாத்திரம் என்பதால் அதை எளிதாக நடித்துவிட்டு செல்கிறார். இவரது தோழியாக வரும் வித்யூலேகா, தம்பி ராமையா, தேவதர்ஷினி காமெடி செய்கின்றனர்.
பெண் அதிகாரியாக வரும் வினுதா லால் உருட்டல் மிரட்டல், முறைப்பு தெனாவட்டு என பல வித நடிப்பை வெளியிட்டு வில்லத்தனத்தில் சொர்னக்காவாக மாறி இருக்கிறார்.
எஸ்.என்.வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயகுனர் மனிகா வித்யா நீளமான படமென்றாலும் படத்தை பொழுதுபோக்கு காமெடி கலந்து ஜனரஞ்சகமாக இயக்கியிருக்கிறார். சில காட்சிகளுக்கு கத்தரி போட்டால் படம் வேகம் கூடும்.
தண்ணி வண்டி – காமெடி வண்டி