Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஹிட் : தி தேர்ட் கேஸ் (பட விமர்சனம்)

படம்: ஹிட் : தி தேர்ட் கேஸ்

நடிப்பு: நானி, ஶ்ரீ நிதி ஷெட்டி, சமுத்திரக்கனி, சூர்யா ஶ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், கோம்லே பிரசாத், ரவீந்திர விஜய், பிரதிக் பாபர், அமித் ஷர்மா இவர்களுடன் கெஸ்ட் ரோலில் கார்த்தி.

தயாரிப்பு:.பிரசாந்தி டிரிபிர்நேநி , நானி

இசை: மிகி ஜே மேயர்

ஒளிப்பதிவு: சானு ஜான் வர்கீஸ்

இயக்கம்: சைலேஷ் கொளனு

பி ஆர் ஒ: யுவராஜ்

நகரில் 9 மாத பெண் குழந்தை காணாமல் போனதாக போலீசில் புகார் தரப்படுகிறது. கட் செய்தால் போலீஸ் அதிகாரி அர்ஜுன் சர்க்கார் (நானி) கொடூர கொலை வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். டார்க் வெப் சைட் மூலம் ஒரு கூட்டம் தீவிரவாதி களை தங்கள் குழுவில் சேர்க்கிறது. அந்த குழுவுக்குள் திட்டம்போட்டு நுழைகிறார் அர்ஜுன் சர்க்கார். போலீஸ் அதிகாரி ஒருவர் தங்கள் தீவிரவாத குழுவில் ஊடுருவியதை அக்குழுவின் தலைவன் மோப்பம் பிடிக்கிறான். அவனிடம் அர்ஜுன் சிக்கினாரா? அடுத்து நடந்தது என்ன? என்பதை இரத்தம் கொப்பளிக்கும் ஆக்ஷனுடன் விளக்குகிறது கிளைமாக்ஸ்.

சஸ்பென்ஸ், த்ரில்லர் ஆக்ஷன் பாணியில் இப்படத்தை இயக்குனர் டிசைன் செய்திருப்பது தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை அதிரும் காட்சிகளாக உணர்த்துகிறது .

அர்ஜுன் சர்க்காராக மாறுவதற்கு மேக்சிமம் எபெர்ட் போட்டு அதிரடி கிளப்பியிருக்கிறார் நானி. தொடக்க காட்சிகளில் அவரே ஆட்களை கடத்தி தனி இடத்தில் வைத்து கழுத்தறுத்து கொலை செய்யும்போது நானி வில்லனாக நடிக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.

சண்டை காட்சிகளில் நானி புது அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் காட்டும்கோபம், எதிரிகளை ஆவேசத்துடன் மோதி தாக்கும் வேகம் என மிரள விடுகிறார்.
தீவிரவாதிகள் முகாமிற்குள் நுழைந்து ஒன் மேன் ஆர்மியாக தாக்குதல் நடத்துவதும் , வெள்ளை உடை இரத்தச் சிவப்பாகி இரத்த குளியல் நடத்துவதும் அரங்கில் அதிர்ச்சி பரவச் செய்கிறது. சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டரின் தொடர் தாக்குதல் காட்சிகள் படத்தின் பெரும்பகுதியை ஆக்ரமிக்கிறது. சண்டை பிரியர்களுக்கு மாபெரும் விருந்துதான்

ஶ்ரீ நிதி ஷெட்டி டூயட் பாடிவிட்டு காணாமல் போய்விடுவார் என்று நினைத்தால் படத்தின் 2ம் பாதியில் அவரும் கண் பைட் காஞ்சனா வாக மாறி ஆக்ஷன் களத்துக்கு என்ட்ரி தருவது எதிர்பாராத ஷாக்..

படம் முழுவதும் இரத்த ஆறு ஓடினாலும் குழந்தை சென்ட்டிமென்ட் அதை நியாயம் செய்கிறது. நானி, ஶ்ரீ நிதி காதல் மயிலிறகு வருடல்.

மிகி ஜே மேயர் இசை பிரமாண்டம், சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு 360 டிகிரி கேமரா சுழற்சி.

சைலேஷ் கொளனு இயக்கம் அமோகம்.

ஹிட் படத்தின் அடுத்த பாகத்தில் கார்த்தி நடிக்கிறார். அதற்கான கேரண்ட்டியை கெஸ்ட் ரோலில் என்ட்ரீ கொடுத்து கன்பார்ம் செய்கிறார் கார்த்தி.

ஹிட் தி தேர்ட் கேஸ் – நானியின் ஆக்ஷன் ஸ்பெஷல்.

Related posts

“Jothi’ teaser crossed 1 million views

Jai Chandran

Archana Kalpathi appointed Temple Trustee Member..

Jai Chandran

Papua New Guinea to a global audience

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend