Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மையல் (பட விமர்சனம்)

படம்: மையல்
நடிப்பு: சேது, சம்ருதி தாரா, பி எல் தேனப்பன், சூப்பர் குட் சுப்பிரமணியன், ரத்னகலா, சி எம் பாலா

தயாரிப்பு: அனுபமா விக்ரம் சிங், வேணுகோபால்.ஆர்.

இசை: அமர்ஜித்.எஸ்.

ஒளிப்பதிவு: பாலா பழனியப்பன்

கதை வசனம்: ஜெயமோகன்

இயக்கம்: ஏ பி ஜி ஏழுமலை

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

மாடசாமி ஒரு ஆடு திருடன். கிடையில் இருக்கும் ஆட்டை திருடிக் கொண்டு ஓடும்போது ஊர்காரர்களிடமிருந்து தப்பிக்க அப்பகுதியில் உள்ள சூன்யகாரி வீட்டுக்குள் தஞ்சம் அடைகிறான். சூனியகாரி மகள் மாடசாமி மீது காதல் கொள்கிறாள். அவளை மணப்பதற்காக திருட்டு தொழிலை விட முடிவு செய்கிறான் மாடசாமி. இந்த நிலையில் ஒரு கொலைப் பழி அவன் மீது விழுகிறது. போலீஸ் மாடசாமியை கைது செய்கிறது. அதன் பிறகு எதிர்பாராத அதிர்ச்சி சம்பவங்கள் நடக்கின்றன அது என்ன என்பது கிளைமாக்ஸ்.

மையல் என்றால் மயக்கம் என்று அர்த்தம். திருடன் ஒருவனுக்கு இளம் பெண் மீது காதல் மயக்கம் ஏற்படுகிறது  அது அவனை என்ன பாடு படுத்துகிறது என்பதை எல்லாம் திரைக்கதை எதிர்பாராத திருப்பபங்களுடன் சொல்லி நகர்த்துகிறது.

மாடசாமி பாத்திரத்தில் ஒரு எதார்த்த கிராம வாசியாக சேது வாழ்ந்திருக்கிறார். ஹீரோ என்ற இமேஜ் எல்லாம் பார்க்காமல் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை உணர்ந்து  குணச்சித்திர நடிகராக கண் முன் நிற்கிறார்.

நாயகி சம்ருதி தாரா தமிழ் திரைக்கு கிடைத்திருக்கும் இன்னொரு தேவையானி. அவரது சிரிப்புக்கு எதுவும் மயங்கும் சேது மயங்கமாட்டாரா? மயங்கிவிட்டார்!

பி எல் தேனப்பன் ஒரு வில்லனாக மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி யிருக்கிறார்.

ஒவ்வொரு பிரேமிலும் சம்ருதி சிரிக்க தவறவில்லை அதில் ரசிகர்களும் மயங்க தவறவில்லை. இப்படி சிரித்துக் கொண்டிருக்கும் கதாநாயகிக்கு கிளைமாக்சில் இப்படி ஒரு கதியா என்று கதி கலங்க வைக்கிறார் இயக்குனர்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார் ஜெயமோகன் . இவரது கதை என்றாலே அதற்கு ஒரு தனி மவுசு உண்டு. அதை ஏற்கனவே சில படங்கள் நிரூபித்திருக்கின்றன. ஆனால் இந்த கதையை பொறுத்தவரை பாதி கதை மனதை ஜில்லிட வைக்கிறது, மீதிக்கதை மனதை நடுங்க வைக்கிறது.
ஒரு சில கதைகளை காட்சிப்படுத்தும்போது அதை கமர்சியலாக அல்லது காதல் கனிரசமாக மாற்றுவது  இயக்குனர் கையில் தான் இருக்கிறது. அந்த வாய்ப்பை இயக்குனர் ஏபிஜி ஏழுமலை தவறவிட்டிருக்கிறார். உள்ளதை உள்ளபடி எடுத்திருக்கிறார். கதைக்கு நியாயம் செய்தவர் ரசிகர்கள் மனதுக்கு அதை செய்தாரா என்பது கேள்விக்குறிதான்.

மையல் என்ற படத்திற்கு கொடுக்கப்பட்ட முன்னோட்ட விமர்சனங்கள் இது ஒரு அழகியல் படம் என்று எல்லோர் மனதிலும் பதிந்திருந்தது ஆனால் அதை படத்தின் கிளைமாக்ஸ் சுக்கு நூறாக நொறுக்கி விட்டது.

மையல் – நெருப்பில் கருகும் காதல்.

 

 

 

Related posts

Stalwart producer K C Bokadia to make a Tamil film

Jai Chandran

நந்தன் நாயகனாக மாறியது எப்படி? சசிகுமார் பேச்சு

Jai Chandran

CriminalCrush Exclusive Making Video

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend