Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மைலாஞ்சி (பட விமர்சனம்)

படம்: மைலாஞ்சி

நடிப்பு: ஶ்ரீராம் கார்த்திக், கிருஷா க்ரூப் முன்ஷ்காந்த், சிங்கம் புலி

தயாரிப்பு: அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்

இசை: இளையராஜா

ஒளிப்பதிவு: செழியன்

இயக்கம்: அஜயன் பாலா

பிஆர் ஓ: நிகில் முருகன்

ஊட்டிக்கு அரிதான பறவையை புகைப்படம் எடுக்க வருகிறார் வைல்டு லைப் போட்டோகிராபர் சூர்யா (ஶ்ரீராம் கார்த்திக்). அங்கு வெகுளித்தனமாக பேசித் திரியும் சாரு (கிருஷா க்ரூப்) மீது காதல் கொள்கிறான். அவளிடம் சூர்யா காதலை சொல்ல முயலும்போது , தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரிடம் தன்னை சேர்த்து வை’ என்று சாரு கேட்கிறாள். ஷாக் ஆன சூர்யா தன் காதலை மறைத்துக் கொண்டு சாருவை அவளது காதலனுடன் சேர்த்து வைக்க முயற்சிக்கிறான் . இதன் முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.

2k கிட்ஸ் காதல் கதைகள் வந்து ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் நிலையில் 90ஸ் கிட்ஸ் காதலை மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் அஜயன் பாலா, துணையாக இசைஞானி இளையராஜா இசை அலைகளை படம் முழுவதும் வெள்ளமாக பாய விட்டிருக்கிறார்.

ஹீரோ ஶ்ரீராம் கார்த்திக் மென்மையான நடிப்பு காதலை சொல்ல தயங்குவது என இதயம் முரளியாக மாறி யிருக்கிறார்.
காட்டுக் குருவியிடம் பிஸ்கட் நீட்டி சாப்பிடக் கெஞ்சிக் கொண்டிருக்கும்
கிருஷா க்ரூப்பின் வெகுளித்தனத்தை கண்டு ஆச்சரியப்படும் ஶ்ரீராம் கார்த்திக் அவர் மீது காதல்.கொள்வதில் ஆச்சர்யமில்லை.

கிருஷா க்ரூப்பின் காதலனுக்கு ஶ்ரீராம் கார்த்திக் ஈ மெயில் மூலம் காதல் தூது அனுப்புவது அந்த கால புறாவிடு தூது டெக்னிக்..

கிருஷாவின் காதலன் வரமாட்டான் என்று எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் திடீரென வந்து நிற்பதும் ஆனால் தான் உண்மையில் ஶ்ரீராமை காதலிப்பதை உணரும் கிருஷா தடுமாறி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற ஆர்வம் மின்னல் நிமிட பரபரப்பு.

படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன் தயாரித்திருக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இளையராஜாவின் அந்த வயலின் BGM காதில் காட்டாறாக பாய்கிறது.

ஊட்டி பசுமை செழியன் கேமராவில் குடிபுகுந்திருக்கிறது

90ஸ் காதல் இன்னும் வாழ்கிறது என்ற இயக்குனர் அஜயன் பாலாவின் நம்பிக்கை படமாகியிருக்கிறது.
2k கிட்ஸ் என்ன முடிவு செய்வார்களோ?

மைலாஞ்சி – ராஜா இசைக்காக…

Review By
K.Jayachandhiran
trending cinemas .com

 

Related posts

Director Shankar share positive feedback For Kasadatapara

Jai Chandran

தயாரிப்பாளர் குணாநிதி திருமணத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

Jai Chandran

11 நாடுகளில் 18 டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் ஆர்கே

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend