Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

3வது முறையாக இணையும் “காவல்துறை உங்கள் நண்பன்” பட புகழ், ஆர் டி எம், சுரேஷ் ரவி கூட்டணி !

நீண்ட பொதுமுடக்க காலத்தின் பாதிப்புகள், உலகம் முழுக்க அனைத்து துறைகளிலும் எதிரொலித்தாலும், திரைத்துறையை தான் அதிகம் பாதித்தது. ஆனாலும் நல்ல சினிமாக்களை மக்கள் என்றும் கைவிடுவதில்லை. இந்த பொதுமுடக்க காலம் முடிந்து தமிழ்திரையில் வெளியான “காவல்துறை உங்கள் நண்பன்” அதன் தரமான கருத்தியல்களுக்காக, மிக அற்புதமான உருவாக்கத்திற்காக அனைவராலும் பாராட்டு பெற்றது. மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று, சமீபத்தில் வெளியான படங்களில் அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையையும் படைத்தது. இந்த நிலையில் “காவல்துறை உங்கள் நண்பன்” பட RDM, சுரேஷ் ரவி கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளார்கள்.

இன்னும் தலைப்பிடப்படாத இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் Preniss International (OPC) Pvt Ltd சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் இயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தையும் தற்போது வெளியாக காத்திருக்கும் ”நட்சத்திரா” படத்தையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து இயக்குநர் ஆர் டி எம் கூறியதாவது…

“காவல்துறை உங்கள் நண்பன்” படம் அனைத்து தரப்பில் இருந்தும் மிகச்சிறந்த பாராட்டுக்களை பெற்று தந்தது. பொதுமுடக்க துயர் காலத்திலும் மக்கள் ஆவலுடன் எங்கள் படத்தினை திரையரங்கிற்கு வந்து பார்த்தது மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்தது. இந்த பாராட்டுக்களும், ரசிகர்களின் வரவேற்பும் மேலும் தரமான திரைக்கதையினை உருவாக்க, பெரும் ஊக்கமாக அமைந்தது. “காவல்துறை உங்கள் நண்பன்” படம் காவல்துறையின் கருப்பு பக்கத்தை காட்டிய நிலையில் நாயகன் சுரேஷ் ரவி, தற்போது உருவாகவுள்ள படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழின் பிரபல நடிகர்கள் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். K.S. விஷ்ணு ஶ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். விரைவில் படத்தின் இசையமைப்பாளரை இறுதி செய்யவிருகிறோம். சென்னை, பாண்டிச்சேரி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவக்கப்பட்ட நிலையில் இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பை துவங்கவுள்ளோம்.

Related posts

சிறு பட்ஜெட் படங்கள்: பத்திரிகையாளர் விழாவில் எஸ் ஏ சி வேண்டுகோள்

Jai Chandran

பரோல் ( பட விமர்சனம்)

Jai Chandran

நானி நடிக்கும் “சூர்யாவின் சனிக்கிழமை” தொடக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend