Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லோக்கல் சரக்கு (பட விமர்சனம்)

படம்: லோக்கல் சரக்கு

நடிப்பு:  தினேஷ், யோகி பாபு, உபாசனா.ஆர்.சி,இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம்புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி

தயாரிப்பு:  வராஹ சுவாமி பிலிம்ஸ் கே.வினோத்குமார்

இசை: வி ஆர்.சுவாமி நாதன், ராஜேஷ்

ஒளிப்பதிவு: கே.எஸ்.பழனி

இயக்கம்,: எஸ் பி.ராஜ்குமார்

பி ஆர் ஒ: கிளாமர் சத்யா

வீட்டில் தங்கை வேலைக்கு போக அண்ணன் தினேஷ் தினமும் குடித்துவிட்டு பொறுப்பில்லாமல் திரிகிறார். எதிர் வீட்டில்.குடி வருகிறார் உபாசனா அவரிடமும் 100, 50 .என கடன்  வாங்கி குடிக்கி றார்.  தினேஷ் திருந்துவார் என்று பார்த்து நொந்துபோன தங்கை தன் காதலனை கைபிடித்து வீட்டை விட்டு  வெளியேறுகிறார். இந்நிலையில் உபாசனாதான் தினேஷின் மனைவி என்று ஒரு நபர் கிளப்பி விட வேறு வழியில் லாமல் அவருடன் தினேஷ் ஒரே வீட்டில் தங்குகிறார். ஆனாலும் தினேஷ் குடியை மறக்காமல் எந்நேரமும் குடி. குடி என்று சுற்றுகிறார். இந்நிலையில் தினேஷின் குடிப் பழக்கத்தை  பயன்படுத்தி அவரது திடீர் நண்பர் உபாசனாவை  மானபங்கப் படுத்த எண்ணுகிறார். ஒரு கட்டத்தில் உபாசனாவை திருட்டுத்தனமாக  வீடியோ எடுத்து மிரட்டுகிறான். அடுத்து நடந்தது என்ன என்பதற்கு  எதிர்பாராத ஷாக் பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

முன்னணி ஹீரோக்களுக்கு நடன மாஸ்டராக பல படங்களில் பணியாற்றியிருக்கும்  தினேஷ்  ஏற்கனேவே   சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனால் இப்படத்தில் ஹீரோ என்றாலும் குடியால் மதி கெட்டு திரியும் வாலிபராக நடித்து அசல் குடிகாரனாக மாறியிருக்கிறார்.

டாஸ்மாக் அருகில் நின்று போவோர்  வருவோரிடமெல்லாம்  10 ரூபாய் கேட்டு தினேஷ் அசிங்கப்படுவது  கடுப்பேற்று வதாக இருந்தாலும் பல டாஸ்மாக் பார் அருகில் நிஜத்தில் நடக்கும் அக்கப்போர் இதுதான்

மனைவியை ஒருவன் அசிங்கப் படுத்துவதை பார்த்தும் அவனிடம் தினேஷ் கெஞ்சிக் கொண்டிருப்ப தெல்லாம்  அவரை வெறும் வெத்துவேட்டாகவே காட்டுகிறது.  அதற்காகவாவது இயக்குனர் தினேஷுக்கு ஓரிரு சீன்களில்  ஆக்ஷன் சீன் இல்லாவிட்டாலும் கோபப்படும் சீனாவது கொடுத்தி ருக்கலாம்.

பார் பாடல் காட்சி ஒன்றில் தினேஷ் மாஸ்டர் அசத்தலாக ஆடி ரசிகர்களுக்கு ஆறுதல் தருகிறார்.

ஹீரோயின் உபாசனா போல்டான பாத்திரம் ஏற்றிருக்கிறார். அதற்கேற்ற தோற்றத்திற்கும்  கச்சிதமாக பொருந்தி இருக்கி றார்.  தினேஷ் குடித்து விட்டு வரும்போதெல்லாம் அவரை எப்படியாவது திருத்தி குடும்ப வாழ்க்கையில்  ஈடுபட வைக்க உபாசனா எடுக்கும் முயற்சிகள்  ஒரு கட்டத்தில் வெற்றி பெறும்போது ஆறுதல் பிறக்கிறது.

தினேஷின் நண்பராக வந்து காமெடியில் கலகலக்க வைக்கிறார் யோகி பாபு. ஒரு.கட்டத்தில்  உபாசனாவுக்கு காதல் நூல் விட்டு மொக்கை வாங்குவது சிரிப்பு.

வடிவேலுக்கு பல படங்களில் காமெடி டிராக் எழுதி அவரது வெற்றிக்கு உடனிருந்த எஸ்.பி.ராஜ்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். கதையில் திரும்ப திரும்ப தினேஷ் தண்ணியடிக்க அலையும் காட்சி களையே காட்டி  காண்டாக்கி னாலும் யோகி பாபு, சாம், சிங்கம் புலி, சென்றாயன், இமான் அண்ணாச்சி என ஒரு காமெடி பட்டாளத்தையே களத்தில் இறக்கி விட்டு காமெடி ஸ்கிரிப்ட் மன்னன் என்பதை நிரூபிக்கிறார்.

கே.எஸ்.பழனி கேமிரா   காட்சி களில் தெளிவை காட்டுகிறது. வி ஆர்.சுவாமி நாதன், ராஜேஷ் இசையில் பார் குத்துப்பாட்டு இளசுகளை டப்பாங்குத்து போட வைக்கும்

லோக்கல் சரக்கு – குடும்ப சென்ட்டி மெண்ட்டுடன் கூடிய  குடிகாரனின் கதை.

 

 

 

 

 

Related posts

இயக்குனர் தாமிரா காலமானார்..

Jai Chandran

SathyaJyothi_ T.G. Thyagarajan presents Anbarivu Trailer

Jai Chandran

Sasikumar’s Kaari Trailer crossed 1.5 Million Plus views within 24 hours

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend