Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இளையராஜா மகள் பவதாரிணி திடீர் மரணம்

இசைஞானி இளையராஜா  மகள் பவதாரிணி.  இவர் உடல் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டி ருந்தார். ஆயுர் வேத சிகிச்சை பெறுவதற்காக பவதாரிணி  இலங்கை. சென்றார் கடைசி நிலையிலேயே  இந்நோய் கண்டுபிடிக் கப்பட்டதாக கூறப்படு கிறது.

இந்நிலையில் ஜனவரி 24ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5:20 மணியளவில் பவதாரிணி உயிரிழந்தார் .அவரது உடல்  சென்னை கொண்டு வரப்பட்டது.

மகள் மரண செய்தி அறிந்து இளையராஜா  அதிர்ச்சி அடைந் தார்.

முன்னதாக ஒரு வாரம் முன்பாக பவதாரிணி உள்ளிட்ட சிலர்  இலங்கை வந்தனர்.கொழும்பில் வாடகை வீட்டில்  தங்கி ஆயுர்வேத சிகிச்சை வழங்கப்பட்டது. இதற்கிடையில் இசை நிகழ்ச்சிக் காக இளைய ராஜா கடந்த 24ம் தேதி கொழும்பை சென்றார். இதனிடையே, பவதாரணிக்கு நேற்று முன்தினம் திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டது.

உடனடியாக பவதாரணி கொழும்பு லங்கா மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.  சிகிச்சை பலனின்றி  வியாழக்கிழமை மாலை பவதாரிணி காலமானார். அவருக்கு வயது 47.

இளையராஜாவின் இசையில் பாரதி என்ற படத்தில் “மயில் போல பொண்ணு ஒன்னு” என்ற பாடலை  பவத்தாரணி பாடினார். இப்பாடல்   அவருக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

பவதாரிணி மறைவுக்கு தமிழ்நாடு முதல்.அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் உள்ளிட்ட திரையுலகினர் ஏராள மானவர்கள் பவதாரிணி மறைவுக்கு இரங்கல் தெரிவித் துள்ளனர்.

Related posts

FriendshipMovie Making Promo

Jai Chandran

சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்” படத்தின் டிரெய்லர்,

Jai Chandran

ஷாருக்கின் ஜவான் பட முதல் பாடல் 46 மில்லியன் பார்வை சாதனை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend