Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டாக்ஸிக் (பட விமர்சனம் )

படம் : டாக்ஸிக்

நடிப்பு: யாஷ்,, நயன்தாரா கியாரா அத்வானி,, தாரா சுதாரியா, ஹுமா  குரோஸி, ருக்மணி வசந்த்,

தயாரிப்பு: KVN புரொடக்ஷன்ஸ் மற்றும்மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்

இசை:ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி

ஒளிப்பதிவு : ராஜீவ் ரவி

இயக்கம்: கீது போகன் தாஸ்

பி ஆர் ஓ யுவராஜ்

 கதை: கங்கா, ராயலன் (நயன்தாரா, யாஷ் ) சிறுவயதில் அனாதையாக தவிக்கும் நிலையில் பெரிய கேங் ஸ்டார் ஆகிறார் ராயன். சர்க்கஸ் அழகி நதியா (கியாரா அத்வானி ) அழகில் மயங்கும் ராயன் அவரை காதலிப்பதுடன் நெருக்கமாக பழகுகிறார்கள். இந்நிலையில்  வேறு பெண்ணுடன் ராயனுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. அந்த ஏற்பாடு நடக்கும் நிலையில் நதியா கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கிறது. அதைக் கேட்டு ராயன் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடையும் நிலையில் எதிர்பாராத சம்பவங்கள் அந்த குடும்பத்தில் நடக்கிறது. ஒரு கட்டத்தில் ராயனின் மகன் வளர்ந்து அவரை பழிவாங்க துடிக்கிறான். இதன் முடிவு என்னவாகிறது என்பதை ஆக்ஷன்.அதிரடியாக சொல்கிறது டாக்ஸிக்  கிளைமாக்ஸ்.

கே ஜி எஃப் படத்தில்  யாஷ்  ஒன்று அல்லது இரண்டு மடங்கு ஆக்சன் காட்சி காட்டியிருந்தால் டாக்ஸிக்  படத்தில் 10 மடங்கு அதிகரித்திருக்கிறார் . அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் துப்பாக்கி சத்தம் இல்லாமல் இல்லை.

சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள்,

செத்துக் கொண்டே இருக்கிறார்கள

ஆட்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்

மீண்டும் மீண்டும் கிளைமாக்ஸ் வரை இதுதான் நடக்கிறது.

சுட்டு தள்ளப்படுவதில் ஒரு சிலர் யார் என்று தெரிந்தாலும் பலர் யார் என்றே தெரியவில்லை கொத்துக்கொத்தாக துப்பாக்கி குண்டுக்கு பலியாகிறார்கள்.

படத்தின் முதல் பாதியில் யாஷ்  ரொமான்டிக் ஹீரோவாக நடித்திருக்கிறார். பார்க்கும் இளவட்ட பெண்களை  வளைத்து போட்டு ருசி பார்க்கிறார் குறிப்பாக கியாரா அத்வானியுடன்  காட்டும் நெருக்கம்  ஜேம்ஸ் பாண்ட் படங்களையே மிஞ்சி விடுகிறது நம்ம ஊரு ஹீரோ பற்றி சொல்ல வேண்டுமென்றால் முத்தக்காட்சி படுக்கையறை காட்சிகளில் கமல்ஹாசனையே மிஞ்சு விடுகிறார் யாஷ். படத்தின் முதல் பாதியே  நீண்ட நேரம் ஓடிய களைப்பு ஏற்படுகிறது அதன் பிறகு வரும் இரண்டாம் பாதியில் காட்சிகள் முழுக்க முழுக்க ஆக்சன் போர்க்களமாக இருக்கிறது.

தலை நரைத்தாலும் ஆக்ரோஷமும் ஆவேசமும் நரைக்கவில்லை  என்பது போல் யாஷ் மீண்டும் புதியதொரு ஆக்சன் அவதாரம் எடுக்கிறார்.  முதல் பாதியில் பார்த்த ஆக்சனை விட இரண்டாம் பாதி  அரங்கை அதிரிபுதிரியாக்கு கிறது .

தன் மகனுடன் யாஷ் போடும் சண்டைக் காட்சி அத்துடன் மகன் மீது வைத்திருக்கும் பாசத்தில் ஆக்ஷனுடன்  காட்டும் பாசம் என இரு மாறுபட்ட நடிப்பை ஒரே பிரேமுக்குள் கொண்டு வந்திருப்பது யாஷின் முத்திரை பதிக்கும் நடிப்பு.

யாஷிமின் அக்காவாக வருகிறார் நயன்தாரா . பெரிதாக வேலை ஒன்றும் இல்லை அதேசமயம் அவர் தோற்றத்தில் ஏதோ மாற்றம். ஸ்லிமான  தோற்றம்  புஸ்டியானது போல தோன்றுகிறது முகத்திலும்  முதிர்ச்சி எட்டிப் பார்க்கிறது.

தாரா சுதாரியா, ஹுமா  குரோஸி, ருக்மணி வசந்த் ஆகியோரும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்கவில்லை

KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்  படத்தை தயாரித்திருக்கிறது.

ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி  ஆகியோர் இடியென இறக்கியிருக்கும் இசை  இருக்கைகளை வைப்ரேஷனில் ஆழ்த்துகிறது

ராஜீவ் ரவி கேமரா  ஒன்றுக்கொன்று  தொடர்பில்லாமல் நினைத்த இடத்திலெல்லாம் கேமராவை வைத்து படமாக்கியிருப்பது என்ன பாணியோ புரியவில்லை.

படத்தில்  கவனத்தை ஈர்ப்பது ஆக்சன் காட்சிகள்.  நிச்சயமாக ஒரேயொரு ஸ்டண்ட்  இயக்குனரால்  இவ்வளவு ஆக்சன் காட்சிகளை இயக்க முடியாது. அரங்கை களேபாரத்தில்  ஆழ்த்தும்   இந்த ஸ்டண்ட் காட்சிகளை அதிரடி ஸ்டண்ட்  இயக்குநர்கள்: ஜே. ஜே. பெர்ரி, அன்பரிவ், கெச்சா காம்பக்டீ, அம்ரித் சிங் அமைத்திருக்கிறார்கள்.

தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருக்கும் நடிகை கீது போகன் தாஸ்  டாக்ஸிக். படத்தை இயக்கி இருக்கிறார். மிகப்பெரிய ஆக்சன் ஹீரோவான யாஷ் நடிக்கும் படத்தை  ஆக்ஷன் காட்சிகளுக்கும்,  கவர்ச்சி காட்சிகளுக்கும் பஞ்சம் வைக்காமல் கீது மோகன்ராஜ் இயக்கி இருப்பது  ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும்  கதையின் போக்கை இன்னும் கூட தெளிவாக கூறியிருக்கலாம். கொஞ்சம் கவனம் சிதறினாலும் கதை  மண்டையை குழப்பிவிடும்.

டாக்ஸிக் – திணறத் திணற அடிக்கும்  ஆக்சன் கவர்ச்சி அதிரடி.

Review by

K. Jayachandhiran

www.Trendingcinemasnow.com

 

 

Related posts

Mohanlal’s ‘Vrusshabha’ Wraps Shoot

Jai Chandran

Shooting of ‘LGM’ Progressing Rapid Pace,

Jai Chandran

முதன்முறையாக இணையும் ஜீ வி பிரகாஷ் – ஐஸ்வர்யா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend