Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் மஹி  (இந்தி பட விமர்சனம்)

படம்: மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் மஹி  (இந்தி )

நடிப்ப: ராஜ்குமார், ராவ், ஜான்வி கபூர், குமுத் மிஸ்ரா, ஜரீனா வஹாப் மற்றும் பலர்

தயாரிப்பு: கரண் ஜோகர்

இசை: ஆதேஷ் ஸ்ரீ வஸ்தபா

ஒளிப்பதிவு: அனை ஓம் கோ சுவாமி

இயக்கம்: சரண் சர்மா

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா

ராஜ்குமார் ராவ் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக ஆசைப்படு கிறார். ஆனால் அந்த முயற்சியில் அவர் தோல்வியடைகிறார். இந்நிலையில் அவருக்கு ஜான்வி கபூருடன் திருமணம் நடக்கிறது. ஜான்வி டாக்டருக்கு படித்தவர். ஒரு சமயம் அவர் கிரிக்கெட் விளையா டுவது கண்டு ஆச்சரியப்படும் ராஜ்குமார் அவரையே கிரிக்கெட் வீரராக உருவாக்குவதற்கு முடிவு செய்கிறார். முதலில் தயங்கும் ஜான்வி கபூர் பின்னர் தனது சிறு வயது கனவான கிரிக்கெட் வீரர் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்கிறார். இதில் பல்வேறு இழப்புகளையும் அவமானங்களையும் அவர்கள் சந்திக்கிறார்கள் இறுதியில் நடந்தது என்ன என்பதற்கு மிஸ்டர் மிஸஸ் மஹி பதிலளிக்கிறது

கதை முழுவதுமே கிரிக்கெட் பின்னணியை வைத்து தான் உருவாக்கி இருக்கிறார்கள். ராஜ்குமார் ராவ் ஆவரேஜ் கிரிக்கெட் வீரராகவே இருக்கிறார். வீரராக ஜெயிக்க முடியாத அவர் மீது தந்தை கோபம் கொண்டு,” நீ கடையை பார்த்துக் கொள் இனிமேல் இந்த கிரிக்கெட் எல்லாம் வேண்டாம்” என்று அடித்து சொல்லும்போது ராஜ்குமார் பாவமாக நிற்பது பரிதாபமாக இருக்கிறது. ஆனாலும் அவர் ஒவ்வொரு முறை முயற்சி செய்யும் போதும் தோல்வியையே எதிர்கொள்ளும்போது காட்சிகளில் தொய்வு ஏற்படுகிறது.

இறுதிவரை தோற்ற நபராகவே ஒரு ஹீரோ நடிப்பது என்பது அபூர்வமான விஷயம் அதை ராஜ்குமார் துணிந்து செய்திருக்கிறார். இது அவரது நடிப்புக்கு சபாஷ் பெற்று தந்தாலும் அவரது இமேஜுக்கு பின்னடைவை தான் தரும்.

ஜான்வி கபூர் கிரிக்கெட் பேட்டை பிடித்து அடிக்கும் ஸ்டைல் அவர் இதற்காக மெனக்கெட்டு கடுமையான பயிற்சி பெற்று இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.

கணவர் ராஜ்குமாரால் ஏற்படும் மன உளைச்சலுக்கும்,  அதை எண்ணி வருந்தி கிரிக்கெட் ஆடும் போது ஆட்டத்தை கோட்டை விடும் போதும் இருதலைக்கொல்லி எறும்பாக நடிப்பை கச்சிதமாக வெளியிட்டு இருக்கிறார்.

படத்தில் நடித்திருக்கும் மற்ற நட்சத்திரங்களும் தங்கள் நடிப்பை இயல்பாக வழங்கி இருக்கிறார்கள்..

சரண் சர்மா உள்ளிட்ட மேலும் சில இசையமைப்பாளர்கள்  இணைந்து படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள்.

அனை கோ சுவாமி ஒளிப்பதிவு காட்சிகளை மிகைப்படுத்தாமல் காட்டி இருக்கிறது.

சரண் சர்மா திரைக்கதை ஆமை போல் நகர்வதால் காட்சிகளில் நிறைய இடைவெளி இருப்பது போல் உணர்வு ஏற்படுகிறது. ஆனால் கணவன் மனைவி இருவரும் நல்ல புரிதலில் இருந்தால் எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம் என்ற கருத்தை நயம்பட கூறி இருக்கிறார்.

மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் மஹி – புரிதல் இல்லாத கணவன் மனைவிக்கு..

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

கணேஷ் ஆச்சார்யாவின் நடன இயக்கத்தில் ‘நாக பந்தம்’ பாடல்

Jai Chandran

வார் 2 படத்திற்கு டப்பிங் செய்யும் என் டி ஆர்

Jai Chandran

இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஜெய்பீம் விவகாரம் பற்றி அன்புமணி எம் பி பதில் கடிதம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend