படம்: ஹாய்
நடிப்பு: கவின், நயன்தாரா, பிரபு, கே பாக்யராஜ், ராதிகா, சுகாசினி, அம்ருதா வி டி வி கணேஷ், பெப்சி விஜயன் ரெஞ்சி பணிக்கர், சத்யன், ஆதித்ய கதிர், குரோஷி, காவியா அறிவுமணி மிர்ச்சி கெமி
தயாரிப்பு: எஸ்.எஸ்.லலித் குமார், விக்னேஷ் சிவன், நயன்தாரா
இசை: ஜென் மார்ட்டின்
ஒளிப்பதிவு : ராஜேஷ் சுக்லா
இயக்கம்: விஷ்ணு எடவன்
பிஆர்ஓ : யுவராஜ்
கதை: மயில்சாமி (கவின் ) காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறான் ஆனால் அவனை ஒரு பெண்ணும் காதலிக்க முன்வரவில்லை. வீட்டில் பெண் பார்த்து திருமணம் செய்ய எண்ணும்போது வீட்டை விட்டு ஓடி விடுகிறான் என்னை தேடி வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கடிதம் எழுதி வைக்கிறான். அதேபோல் மாப்பிள்ளை பிடிக்காமல் தன் ஊரை விட்டு ஓடி வருகிறாள் தேவயானி (நயன்தாரா). மயில்சாமி, தேவயானி சந்திக்கின்றனர். தேவயானி மீது மயில்சாமிக்கு காதல் பிறக்கிறது ஆனால் தேவயானி வேறு இலக்கியத்துடன் இருக்கிறார். இவர்கள் காதல் கைகூடியதா அல்லது தேவயானி லட்சியத்தை நோக்கி நடந்தாளா என்பதற்கு கிளைமாக்ஸ் திருப்பங்களுடன் விடை சொல்கிறது
டாடா படத்துக்கு பிறகு குடும்ப செண்டிமெண்ட் உடன் கூடிய படத்தில் கம் பேக் கொடுத்திருக்கிறார் கவின். தோளுக்கு மேல் வளர்ந்த பிறகும் அம்மா பிள்ளையாகவே இருக்கிறார். தனது முறைப்பெண்ணிடம் காதல் சொல்ல அவர் கூட அதை ஏற்காததால் மனமுடைந்து தாய் ராதிகா மடியில் படுத்துக்கொண்டு என்னை யார் வீட்டுக்கும் கல்யாணம் செய்து அனுப்பி விடாதே அம்மா என்று குழந்தை போல் பேசும் போது கவின் வெகுளித்தனம் வெளிப்படுகிறது. அம்மா பிள்ளையாக இருந்த கவின் திடீரென்று கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவது ஆச்சரியமாக இருந்தாலும் சென்ற இடத்தில் தனக்கென ஒருவேலை தேடிக்கொண்டு அவர் வாழ்க்கை நடத்துகிறார் என்பது பல இளைஞர்களின் உண்மை நிகழ்வை பிரதிபலிக்கிறது.
கவினிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒரு ஸ்பெஷல் நடனம் படத்தில் இருக்கிறது. இவர் சாக்லேட் பாயாக இருந்து எப்போது ஆக்சன் ஹீரோவாக மாறப்போகிறார் என்று எதிர்பார்ப்பும் tlரசிகர்களிடம் இருக்கத்தான் செய்கிறது.
நயன்தாரா மாப்பிள்ளை பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடி வருவதும் வந்த இடத்தில் தன்னிடம் நைசாக பேச நினைக்கும் ஆட்டோக்காரரிடம் அரிவாளை எடுத்துக்காட்டி விரட்டுவது பரபரப்பு.
நயன்தாராவை பார்த்தவுடன் இவர்தான் தனக்கு கடவுள் அனுப்பி வைத்த காதலி என்று மனதிற்குள் கவின் கற்பனை செய்து கொள்வதும் பின்னர் அதே நினைப்பில் அவருடன் பழக திடீரென்று நயன்தாரா அவர் மீது காதல் இல்லை என்று சொன்னதும் மீண்டும் கவின் மனம் உடைந்து கையில் இருக்கும் ரோஜா பூவை தூக்கி வீசி சோகத்தில் ஆழ்வது விரத்தியின் வெளிப்பாடு
சீனியர் நடிகர்களுடன் நடித்த நயன்தாரா கவினுடன் ஜோடி சேரும்போது பொருத்தமான ஜோடியாக இல்லையோ என்ற ஒரு எண்ணம் எழுகிறது.அதற்கு காரணம் இந்த ஜோடிகளிடையே எந்த நெருக்கமும் காட்டாததுதானோ என்னவோ?
நயன்தாரா பாத்திரத்திற்கு தேவயானி என்று பெயர் வைத்து இயக்குனர் கவின் கதாபாத்திரத்திற்கு ராஜகுமாரன் என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். ஒவ்வொரு முறை தேவயானி பெயரை கூறும்போதும் நடிகை தேவயானி தான் கண்முன் வந்து நிற்கிறார் கிளைமாக்சில் வரும் அந்த சஸ்பென்ஸ் பாத்திரத்திலாவது தேவயானியை நடிக்க வைத்திருந்தால் பிளஸ் ஆக இருந்திருக்கும்

ராதிகா, கவின் மீது பாசம் உள்ள தாயாகவும் ஒரு கட்டத்தில் அவரது கன்னத்தில் அறையும் கண்டிப்பான தாயாகவும் உருமாறுகிறார். மறைந்த பாக்யராஜ் கவின் தந்தையாக தனது அனுபவ நடிப்பை பகிர்ந்திருக்கிறார். நயன்தாரா தந்தையாக பிரபு நடித்திருக்கிறார். பாவம் அவருக்குத்தான் ஜோடி இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் கிளைமாக்ஸ் ஒரு ஜோடி அவருக்காக வந்து நிற்பது இன்ப அதிர்ச்சி.
அம்ருதா வி டி வி கணேஷ், பெப்சி விஜயன் ரெஞ்சி பணிக்கர், சத்யன், ஆதித்ய கதிர், குரோஷி, காவியா அறிவுமணி மிர்ச்சி கெமி ஆகியோரம் நடித்திருக்கிறார்கள்.
படத்தை எஸ்.எஸ்.லலித் குமார், விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரித்திருக்கின்றனர்.
ஜென் மார்ட்டின் இசையும், ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவும் கச்சிதம்.
இயக்குனர் விஷ்ணு எடவன் காதலுடன் ஒரு குடும்ப கதையும் இணைத்து குடும்ப கதம்பரமாக படத்தை இயக்கியிருக்கிறார்.
ஹாய் – மாடர்ன் டைட்டில் பேமிலி டிராமா.

Review by
K. Jayachandhiran
Trending cinemas now.om
