Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வல்லவன் வகுத்ததடா ( பட விமர்சனம்)

படம்: வல்லவன் வகுத்ததடா

நடிப்பு:: தேஜ் சரண்ராஜ், ராஜன் பாலச்சந்திரன்,  அனன்யா மணி,  சுவாதி மீனாட்சி, ஆதித்யா, ரெஜின் ரோஸ்

தயாரிப்பு: விநாயக் துரை

இசை: சகிஷ்னா சேவியர்

ஒளிப்பதிவு: கார்த்திக்

இயக்கம்: விநாயக்  துரை

பி ஆர் ஓ: சதீஷ், சிவா (AIM)

நன்கு வாழ்ந்த குடும்பத்தில் பிறந்த பெண் தந்தையின் ஏமாளித்தனத்தால் சொத்துக் களை இழந்து வாடகை கார் ஓட்டுநராக இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரது வேலை பறிபோகிறது. இந்நிலையில் தந்தை விபத்தில் சிக்குகிறார்,, இன்னொரு பக்கம் பெண் ஒருவர் ஆண்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார், இரண்டு நண்பர்கள் திருட்டு வேலையில் ஈடுபடுகின்றனர், மற்றொரு புறம் ரவுடி ஒருவர் வட்டி வசூல் செய்து கடன் பெற்றவர்களை துன்புறுத்து கிறார். இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட் டுள்ளது இதில் ஒவ்வொருவர் பிரச்சனையும் எப்படி அவர்களின் வாழ்க்கையை கொண்டு செல் கிறது என்பதை கிளைமாக்ஸ் சொல்கிறது.

பகவத் கீதையில் கூறப்பட்ட சில தத்துவங்களை மையமாக வைத்து சமூக ரீதியிலான படமாக இக்கதை யை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் விநாயகர் துரை.

தேஜ் சரண்ராஜ், ராஜன் பாலச்சந்திரன்,  அனன்யா மணி,  சுவாதி மீனாட்சி, ஆதித்யா, ரெஜின் ரோஸ்  இவர்கள்தான் கதையில் கூறப்பட்ட கதாபாத்திரங் களாக நடித்திருக்கின்றனர்  எல்லோருமே இயல்பாக நடித்தி. ருப்பதால் காட்சிகள் நாம் தினம் பார்க்கும் வாழ்க்கையோடு ஒன்றிச் செல்கிறது.

படத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கும் திருப்பங்கள் எதிர்பாராத காட்சிகளாக அமைக்கப்பட்டி ருப்பது கதையை ருசிகரமாக கிளைமாக்ஸ் வரை நகர்த்துச் செல்கிறது.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை மறைமுக மாக இக்கதை சுட்டிக்காட்டுகிறது.

கிளைமாக்ஸ் நெருக்கத்தில் போலீஸிடம் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு கதாநாயகி தப்பிச் செல்ல அவரை போலீஸ் படை விரடடிச் சென்று பிடிக்க அவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வதெல்லாம் வெறும் சினிமாத்தனமாகத்தான் இருக்கிறது.

சூழ்ச்சியின் நோக்கம் தர்மமானால் அந்த சூழ்ச்சியே தர்மம் என்ற ஒரு தத்துவத்தை படத்தில் இயக்குனர் சொல்லி இருப்பது ஏற்கக்கூடிய தாக உள்ளது அதேபோல் கடவுள் வரம் தர மாட்டான் வாய்ப்புகளை தான் தருவான் என்ற இன்னொரு வசனமும் நல்லவர்களாக நடந்து மற்றவரிடம் ஏமாந்து போகிறவர் களுக்கு  சொல்லும் நெத்தியடி தத்துவமாக இருக்கிறது.

விநாயக் துரை இப்படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். சின்ன பட்ஜெட் என்றாலும் சொல்ல வந்த கருத்தை துல்லிய மாக சொல்லி பலருக்கு பாடம் நடத்தியிருக்கிறார்.

சகிஷ்னா சேவியர்  இசையிலும்,  கார்த்திக்  ஒளிப்பதிவிலும்  கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் காட்சிகள் இன்னும் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.

அஜயின் எடிட்டிங் படத்தை வேகமாக செல்ல  உதவுகிறது.

வல்லவன் வகுத்ததடா – விதியின் விளையாட்டு.

 

 

 

 

Related posts

“டைகர் 3” யை நவ-11ல் வெளியிடும் யஷ்ராஜ் பிலிம்ஸ்

Jai Chandran

JAMES CAMERON’S “AVATAR 2” TICKET BOOKING RECORD

Jai Chandran

கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் காலமானார்: தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend