படம்: இதயம் முரளி
நடிப்பு: அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி, தமன் எஸ், நிஹாரிகா, ரக்சன், டிராவிட் ஏஞ்சலின், அஞ்சு குரியன், சுதாகர், யஷாஸ்ரீ, ஜோனிதா
தயாரிப்பு: டான் பிக்சர்ஸ் (DAWN PICTURES )
இசை : தமன் எஸ்
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா, சி எச் சாய்
இயக்கம்: ஆகாஷ் பாஸ்கரன்
பிஆர்ஓ : சதீஷ் (AIM), சுரேஷ் சந்திரா
கதை : பெற்றோரை இழந்த அதர்வாவை தாய்மாமன் நட்டி வளர்த்து ஆளாக்குகிறார். அதர்வாவுக்கு திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. வெளிநாட்டில் பேச்சுலர் பார்ட்டி நடத்த சென்ற அதர்வா அவசர அவசரமாக இந்தியாவுக்கு விமானத்தில் திரும்புகிறார். விமானத்தில் வரும் போது சக பயணி பகத் பாசிலிடம் தனது காதல் கதையை அதர்வா கூறுகிறார். தான் காதலிக்கும் பெண்ணிடம் காதலை சொல்வதற்கு அதர்வா பயப்படுகிறார். இதனால் இரண்டு காதலில் தோற்கிறார். காதலில் தோற்ற அதர்வாவுக்கு நட்டி திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். இந்நிலையில் அதர்வா தனது பழைய காதலிகளை சந்திக்கிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பது கிளைமாக்ஸ்.
90 காலகட்டத்தில் இதயம் படத்தில் முரளி நடித்த அதே போன்ற கதாபாத்திரத்தை இதயம் முரளி படத்தில் அதர்வா ஏற்றிருக்கிறார். அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறார் அதர்வா.
காதலியை காதலோ காதல் என்று காதலிக்கிறார். ஆனால் அந்த பெண்ணிடம் காதலை சொல்ல தயங்கும்போது , இதயம் படத்தில் முரளிக்குத்தான் காதலை சொல்ல தைரியம் இல்லாமல் போய்விட்டது அவரது மகனுக்காவது கொஞ்சம் மாற்றி இயக்குனர் இந்த கதையை எழுதி இருப்பார் என்று பார்த்தால் முரளி எப்படி காதலை சொல்லாமல் தயக்கம் காட்டி நடித்தாரோ அதேபோல் நடிக்க வைத்திருக்கிறார்.
முதல் முறை அவரது இந்த தயக்கம் முரளி மகன் இப்படித்தான் இருப்பார் என்று எண்ண வைக்கிறது ஆனால் அடுத்த முறையும் அதர்வா காதலை சொல்ல தயங்கும் போது கடுப்பும் கோபமும் பொங்கி வruகிறது.

பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் இருவரும் அதர்வாவின் காதலிகளாக நடித்திருக்கிறார்கள். ப்ரீத்தி கதாபாத்திரத்தில் ஒரு டிவிஸ்ட்டை வைத்திருக்கிறார் இயக்குனர்.
கயாடு ரயிலில் புறப்படும் போது அவரிடமாவது அதர்வா காதலை சொல்வார் என்று பார்த்தால் ஊஹும்.. அவரது எதார்த்தமான நடிப்பு என்றாலும் பொறுமையை சோதிக்கிறது.
அதர்வா நண்பர்களாக தமன் எஸ், டிராவிட் ரக்சன், சுதாகர் ஜாலியாக நடித்து காட்சிகளை நகர்த்துகி றார்கள். நட்டி கிளைமாக்சில் எடுக்கும் முடிவு அதிர்ச்சி. அதற்கு ஒரு நியாயம் கற்பிப்பது அதிர்ச்சியை குறைத்து விடுகிறது.
இதய முரளி படத்தை பொறுத்தவரை அதர்வா கிளைமாக்ஸிலாவது தனது காதலை சொன்னாரா இல்லையா என்று ரசிகர்களுக்கு ஒரு போட்டியே வைக்கலாம்.
தமன் எஸ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது. ஒளிப்பதிவாளர்கள்
மனோஜ் பரமஹம்சா, சி எச் சாய் ஆகியோரின் ஒளிப்பதிவு அமெரிக்காவை பளிச்சென்று காட்டி இருக்கிறது
படத்தின் இடைவேளை வரை இதயம் படத்தையே எடுத்து வைத்திருக்கும் இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் இடைவேளைக்கு பிறகு இதயம் படத்தின் இரண்டாம் பாகத்தை சொல்வது போல் காதலை சொல்லி முடித்திருக்கிறார் .
இதயம் முரளி – மீண்டும் ஒரு 90ஸ் கால கட்ட கதையைத்தான் சொல்கிறத

Review By
K. Jayachandhiran
trending cinemas now. com
