Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜனவரி 14 தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் – சரத்

தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடாதமிழ்நாடு – தமிழர்களின் தாய்வீடுஜனவரி 14 – ஐ தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் எனாப்அNகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்நி றுவனத் தலைவர் ரா.சரத்குமார் அறிக்கையில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

‘தமிழ்நாடு” என்ற பெயர் நமக்கு சாதாரணமாக எளிதில் கிடைத்து விடவில்லை. எண்ணற்ற தலைவர்கள், தியாகிகளின் போராட்டம் மற்றும் உயிர்த்தி யாகத்தால் தான் சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் பெற்றது.

முக்கியமாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சுதந்திர போராட்ட வீரர் சங்கரலிங் கனார் அவர்கள் 1956-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கி, 76 நாட்கள் உண்ணா விரதம் இருந்து உயிர்நீத்தார். அதன் காரணமாக 1967-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி, சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1967 இல் தமிழக சட்டப்பேரவை யில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானத் தின்படி, 23.11.1968 அன்று தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு, ஜனவரி 14, 1969 அன்று சென்னை மாகாணம், தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அதிகாரப்பூர்வமாக நடைமுறைப் படுத்தப்பட்டது. அதாவது, தமிழ் நாடு பெயர் மாற்றச் சட்டம் அமல்படுத்தப்பட்டு, 54 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இதில், சென்னை மாநிலத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டுமென அதிமுக தலைமையிலான அரசு 25 அக்டோபர் 2019 அன்று அரசாணை வெளியிட்டிருந்தது. 2021 இல் பொறுப்பேற்ற திமுக அரசு, பேரறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு அரசு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஜூலை 18 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு என்ற பெயர் அமலுக்கு வந்த நாளான ஜனவரி 14 – ஐ தமிழ்நாடு தினமாக நாம் ஏன் கொண்டாடக்கூடாது. தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருவிழா வான பொங்கல் பண்டிகையை ஜனவரி 14 இல் கொண்டாடும் அதே தினத்தில் தமிழ்நாடு தினம் கொண்டாடினால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

மேலும், தமிழ்நாடு பெயர் உருவாக காரணமாக அமைந்த தியாகி சங்கரலிங்கனார் அவர்களுக்கு மெரீனாவில் சிலை வைத்தும், அவர் தியாகத்தை கெளரவிக்கும் விதமாக, தியாகி சங்கரலிங்கனார் தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என்பதையும் கோரிக்கையாக முன்வைக்கிறேன்.

நாட்டில் எத்தனையோ தீர்க்கப் படாத முக்கிய பிரச்சனைகள், மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் இருக்கும்போது, தற்போது தமிழ்நாடா, தமிழகமா என்பதை மையமாக வைத்து நடந்தேறும் விவாதங்கள், சர்ச்சைகள் அனைத்தும் காலத்தை வீணடிக்கும் தேவையற்ற செயலாகவே நான் கருதுகிறேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், சிறப்பாக செயல்பட்டுவரும் தமிழ்நாட்டில் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்து, சர்வதேச அளவில் தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்த பாடுபடு வோம்

இனி எந்தவொரு காலக் கட்டத்திலும் தமிழ்நாடு, ”தமிழ்நாடு” என்றே அழைக்கப்படும்.

ஜனவரி 14 – ஐ தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம்.

இவ்வாறு ரா.சரத்குமார் கூறியுள்ளார்.

Related posts

மிருகா (பட விமர்சனம்)

Jai Chandran

அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மின் கட்டணம் ரத்து செய்க.

Jai Chandran

‘ஹே சினாமிகா’ படத்தின் இளமை ததும்பும் டிரைலர் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend