Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லவ் ஓ லவ் (பட விமர்சனம்)

படம்: லவ் ஓ லவ்

நடிப்பு: பவிஷ்,, நாக துர்கா, செல்வராகவன், கே எஸ் ரவிக்குமார், வனிதா, ஆதித்யா கதிர், சௌந்தர்யா, அஸ்வத் ரம்யா சுப்பிரமணியன்

தயாரிப்பு: தனஞ்ஜெயன்,, தினேஷ் ராஜ், பிரதீப் பார்த்திபன்

இசை:  பாக்சன்

ஒளிப்பதிவு : பி ஜி முத்தையா

இயக்கம்: மகேஷ் ராஜேந்திரன்

பிஆர்ஓ : ரேகா

கதை : ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ரகுவரன் ( பவிஷ் ) அவந்திகாவை (நாகதுர்கா ) காதலிக்கிறார். நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும் ரகுவரன் காதலிக்காக கணக்கில்லாமல் செலவு செய்கிறார். ஒரு கட்டத்தில் லட்சக்கணக்கில் கடன்காரன் ஆகிறார். இந்நிலையில் இருவருக்கும்  மோதல் ஏற்படுகிறது. விவகாரம் போலீஸ் வரை செல்ல  இன்ஸ்பெக்டர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. தன்னை விட்டு விட்டு அவந்திகா செல்ல வேண்டும் அல்லது நான்கு வருடம் நான் செய்த செலவை அவர் 4 மாதம் செய்ய வேண்டும் என்று ரகுவரன் கண்டிஷன் விதிக்கிறான். அதை அவந்திகா ஏற்றுக் கொண்டு  ரகுவரன் தேவைகளை பூர்த்தி செய்ய முடிவு செய்கிறாள் இதை அவரால் நிறைவேற்ற முடிந்ததா அல்லது ரகுவரன் வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டு ஓடிப் போனாரா  என்பதுதான் கிளைமாக்ஸ்.

ரகுவரன் கதாபாத்திரத்தில் பவிஷ் நடித்திருக்கிறார்.  நாக துர்காவை காதலிப்பதற்காக பவிஷ் செய்யும் வேலைகள் இன்றைய இளவட்டங்கள் தனது காதலிக்காக எப்படி எல்லாம் கடன் பட்டு உடன்பட்டு வேண்டியதை வாங்கித் தருகிறார்கள், எப்படி கிரெடிட் கார்டு வாங்கி கடனாளியாகிறார்கள் என்பதை அப்பட்டமாக செய்து காட்டி இருக்கிறார் பவிஷ்.

போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் செல்வராகவனிடம் சிக்கிக் கொள்ளும் பவிஷ்  அவரிடம் காதலால் தான் இழந்த சந்தோஷத்தை பற்றி புட்டு புட்டு வைக்கும் போது  பல இளைஞர்கள் இதுபோல் நமக்கும் நடந்திருக்கிறது என்று  தொடர்புபடுத்திக் கொள்வார்கள்.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு ஹீரோயினாக இப்படம் மூலம் அறிமுகமாகியிருக்கிறார் நாகதுர்கா.

பவிஷை தன் இழுப்புக்கெல்லாம் இழுத்து அவரிடம் இதை வாங்கி கொடு,  அதை வாங்கி கொடு என்று நச்சரிப்பதும், முக்கியமான வேலைகள் இருக்கும்போது உடனே புறப்பட்டு வா என்று அடாவடி செய்வது எல்லாமே சில ஷேடிஸ்ட் காதலிகளின் குணாதிசயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் தன் காதலனை விடக்கூடாது என்பதற்காக எவ்வளவு கடினமான பொறுப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள துணியும்போது அவர் மீது ஒரு இரக்கம் வரத் தான் செய்கிறது. தாலி,  பட்டு புடவை சென்டிமென்ட் இவருக்கும் வொர்க் அவுட் ஆகி இருக்கிறது.

மாதர் சங்கத் தலைவியாக வனிதா நடித்திருக்கிறார். தனது நிஜ பாத்திரம் போலவே படத்தில் நடித்திருக்கிறார்.

பவிஷ் தந்தையாக  கே எஸ் ரவிக்குமார்,  தாயாக சௌந்தர்யா, நாக துர்கா தாயாக ரம்யா நடித்திருக்கின்றனர். படத்தில் காதல் இருக்கிறது காமெடிதான் இல்லை.

தனஞ்ஜெயன்,, தினேஷ் ராஜ், பிரதீப் பார்த்திபன் தயாரித்திருக்கின்றனர்

பாக்சன்  இசை, பி ஜி முத்தையா  கேமரா கை கொடுத்திருக்கிறது

 ஜென்சி காதலை சொல்கிறேன் என்று ஏனோ தானோ என்று ஏதோ ஒரு சமாச்சாரத்தை சொல்லாமல்  உருப்படியான ஒரு கருவை எடுத்துக்கொண்டு காதலாக இருந்தாலும்  கை மீறி செலவு செய்யக்கூடாது என்ற படிப்பினை உணர்த்திருக்கிறார்  இயக்குனர்  மகேஷ் ராஜேந்திரன்

 லவ் ஓ லவ்  – காதல் எக்னாமிக்ஸ்.

Review by

K. Jayachandhiran

Trending cinemas now.com

 

 

Related posts

அறம் செய் படம் பார்த்து திருமா பாராட்டு

Jai Chandran

ஜூலையில் ராம் பொதினேனி நடிக்கும், “தி வாரியர்” ரிலீஸ்

Jai Chandran

சுந்தர்.சி மற்றும் குஷ்பு சுந்தர் மானேஜர் அன்புராஜா திருமணம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend