Trending Cinemas Now
விமர்சனம்

வாழ் (பட விமர்சனம்)

நடிப்பு: பிரதீப், பானு பார்வதி சத்யமூர்த்தி, ஆரவ் கோகுல்நாத். ஸ்ரீஜா திவா, மயூரா,
இசை பிரதீப் குமார்
ஒளிப்பதிவு ஷெல்லே கேலிஸ்ட்
இயக்குனர்:அருண் பிரபு புருஷோத்தமன்
ரிலீஸ்: சோனி லைவ்

பிர்தீப் ஐடியில் வேலை பார்க்கிறார்.  அவரை ஒரு பெண் துரத்தி துரத்தி காதல் கொள்கிறார். பிரதீப் அதை ஏற்கவில்லை; ஒரு சந்தர்ப்பத்தில் பானுவை சந்திக்கிறார். உறவுப்பெண்ணாக இருந்தாலும் பானு திரும்ணம் ஆனவர். ஆனால் அவரது அழகில் பிரதிப் மயங்குகிறார். பானுவுக்கும் வாழ்கை சந்தோஷ்மானதாக இல்லை. சைக்கோ கணவனால் துன்பப்படுகிறார். பிரதீப், பானு அறிமுகம் கள்ளக் காதலாக மாறுகிறது.  இருவரும் தனியாக புறப்பட்டு செல்கின்றனர். அவர்களின்  பயணம் எப்படி முடிகிறது என்பதை கிளைமாக்ஸ் சொல்கிறது.

எய்ட்ஸ் பாதித்த பெண்ணுடன் உறவு கொண்டவர்களை அந்த பெண் என்னபாடுபடுத்துகிறார் என்பதை மையமாக வைத்து அருவி என்ற படத்தை இயக்கி அளித்த அருண் புருஷோத்தமன் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் மற்றொரு மாறுபட்ட கதைக்களம் கொண்ட படம் வாழ்.

பிரதீப் ,  பானு  ரசிகர்களுக்கு புதுமுகங்களாக தெரிந்தாலும் இருவரும் ஆழ்ந்த நடிப்பால் மனதில் இடம் பிடிக்கின்றனர். பிரதிப்பை விட வயதில் மூத்தவரான பானு தனது சைக்கோ கணவர் தன் மகனை அடித்து துன்புறுத்துவதை தாங்க முடியாமல் கணவரை  சாகடிக்கிறார். அங்கிருந்து பானு தப்பிக்க எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில்தான் பிரதீப்புடன் அறிமுகம் கிடைக்கிறது.

தோழிக்கு பணம் தர வேண்டும் என்ற சாக்கில் பிரத்திப்பை துணைக்கு அழைத்துக்கொண்டு  ராமேஸ்வரம் செல்கிறார் பானு. இந்த பயணம் கதையாக விர்கிறது.  சில  படங்களில் நடித்திருந்தாலும் பிரதிப்ப் இப்படத்தை தனது கதாபாத்திரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு பெயரை  தட்டிச் செல்கிறர்.  அருவி பட ஹீரோயினை போலவே இப்பட ஹீரோயின் பானுவும் நடிப்பில் குறை வைக்கவில்லை.

இயந்திரமாகி விட்ட உல்கில் மனிதன் மன நிம்மதிக்கு வருடத்தில் ஒரு மாதமாவது இயற்கை சூழலில் ஒன்றியிருக்க வேண்டும் என்பதை கதைக்கரு உணர்த்தியிருக்கிறது..

ஒளிப்பதிவாளர் ஷெல்லே கேலிஸ்டின் கேமிரா  படத்துக்கு வண்ணம் சேர்கிறது.
இயக்குனர் அருண் பிர[பு புருஷோத்தமன் கம்ர்ஷியல் பார்முளா பாணிக்கு தாவாமல்  2வது படத்திலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார்.  சீட்டுக் கட்டை கலைத்துப்போட்டு பிறகு அதை அடுக்கியதுபோல் படத்தின் திரைக்கதை குழப்பமாக தொடங்கி தெளிவாகிறது.

வாழ்- வாழ்க்கை பயணங்கள்.

Related posts

ராயர் பரம்பரை ( பட விமர்சனம்)

Jai Chandran

சில நேரங்களில் சில மனிதர்கள் (பட விமர்சனம்)

Jai Chandran

வெள்ளிமலை (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend