Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

எல் எஸ் எஸ் (பட விமர்சனம்)

படம்: எல் எஸ் எஸ் (லவ் ஷேர் சப்ஸ்கிரைப் )

நடிப்பு: ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித் தனஜெயன், முத்து புவன்

தயாரிப்பு: பி ரகு

இசை: அஸ்வ மித்ரா

ஒளிப்பதிவு என் எஸ் சதீஷ் குமார்

இயக்கம்: ஆர் மகாலட்சுமி முருகன்

பி ஆர் ஓ : சதீஷ் (AIM )

கதை :கல்லூரி மாணவன் சிவா (ஆதவ் கிருஷ்ணா ) ஒரு சமயம் ரவுடிகளிடம் இருந்து பூஜாவை (சிம்ரன்) காப்பாற்றுகிறான். அவன் மீது காதல் கொள்கிறாள் பூஜா. பின்னர் தன்னை விட்டு பிரிந்திருக்கும் தாயை சந்திக்க காதலன் சிவாவுடன் செல்கிறாள் பூஜா. சென்ற இடத்தில் திடீரென்று காணாமல் போகிறாள். அவள் எங்கு சென்றாள்? யாராவது கடத்தி விட்டார்களா? காதலியை சிவாவால் காப்பாற்ற முடிந்ததா? போன்ற கேள்விகளுக்கு படம் பதில் அளிக்கிறது.

புதுமுக ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார் ஆதவ் கிருஷ்ணா. பக்கத்து வீட்டு பையன் போன்ற எதார்த்த தோற்றம். ஹீரோ என்பதற்காக மெனக்கெட்டு உடலை குறைத்து, சிக்ஸ் பேக் வைத்து அலட்டி கொள்ளாமல் அமுல் பேபி போன்று பூசினார் போன்ற தோற்றத்தில் இருந்தாலும் நடன காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார் என்பதை அவர் ஆடும் நடனம், போடும் சண்டைக் காட்சிகளில் நன்றாகவே உழைப்பு வெளிப்படுகிறது.

ஆனால் அடுத்தடுத்த படத்தில் ஹீரோவாக நிலைக்க அதற்கு ஏற்ற உடற்கட்டை ஆதவ் ஷேப் செய்ய வேண்டியது அவசியம்..
அம்மா அப்பாவுக்கு அடங்கிய பிள்ளையாக 90ஸ் கிட் போல் இருக்கும் ஆதவ் கிருஷ்ணா இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா என்று ஆச்சரியப்பட வைக்கிறார்
காதல் காட்சிகளில் புதுமுகம் சிம்ரன் கிடைத்தார் என்பதற்காக அவரை உருட்டி புரட்டி எடுக்காமல் ரொம்பவே ஜென்ட்லாக நடித்து நல்ல பிள்ளை என்று பெயர் வாங்கிக் கொள்கிறார் ஆதவ்.

புது முகமாக அறிமுகமாகியிருக்கும் சிம்ரன் கண்ணுக்கு குளிர்ச்சியாக கவர்ச்சி விருந்து படைத்து, கண்களால் கவிபேசி இளவட்டங்களை கவர்கிறார்.

ஜாவா சுந்தரேசன் அவ்வப்போது வந்து கிச்சுகிச்சு மூட்ட பார்க்கிறார்.

படத்தை தயாரித்திருக்கிறார் பி ரகு.

என் எஸ் சதீஷ்குமார் கேமரா கண்களுக்கு குளிர்ச்சி மட்டுமல்ல காசியில் மூலை முடுக்கெல்லாம் சுழன்று ரசிகர்களை காசி யாத்திரை கொண்டு சென்றிருக்கிறது.

படத்திற்கு இன்னொரு பிளஸ் அஸ்வமித்ரா இசை. ஹாரிஸ் ஜெயராஜ் இசையை கேட்டது போன்று பாடல்கள் மெலடி மெட்டில் காதுக்குள் ரீங்காரமிட்டு விரல்களை தாளம் போட வைக்கிறது.

முதல் பாதியில் ஜாலியான காதல் கதையாக கொண்டு சென்றாலும் இடைவேளைக்குப் பிறகு கதையை கிரைம் சாயலுக்கு மாற்றி விறுவிறுப்பு கூட்டி இருக்கிறார் இயக்குனர் ஆர் மகாலட்சுமி முருகன். அதேசமயம் காட்சிகள் நீண்டு சென்று கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதால் பத்து நிமிடத்திற்கு கத்தரி போட்டு படத்தின் விறுவிறுப்பை கூட்டலாம்.

எல் எஸ் எஸ் – இசை வெள்ளத்துடன் இதமான காதல் கதை.

Review By
K Jayachandhiran
trending cinemas now. com

Related posts

பிரைம் வீடியோவில் ஸ்வீட் காரம் காபி, ஜூலை 6ல் பிரீமியர்

Jai Chandran

Stewart Copeland, Ricky Kej and Lahari Music win the Grammy Award

Jai Chandran

ஃபெர்ஹானா (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend