கொரோனா ஊரடங்கு தொடங்கி கடந்த 5மாதமாக பல்வேறு விதமான தளர்வுகள் அறிவிக்கப்பட் டும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட வில்லை. 5 சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி கேட்டு மத்திய, மாநில அரசு களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து வரும் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
அதற்கான வழிகாட்டு விதிமுறைகளை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று அறிவித்தார்.
சினிமா தியேட்டர்களில் ரசிகர் களுக்கு காய்ச்சல் டெஸ்ட் எடுத்தபிறகு காய்ச்சல் இல்லாவிட்டால் மட்டுமே தியேட்டருக்குள் அனுமதிக்க வேண்டும். இருக்கைகள் 50சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இருக்கை இடைவெளிவிட்டு அமர வேண்டும்.
டிக்கெட் கவுண்டர்கள் எப்போதும் திறந்திருக்கவேண்டும்.டிஜிட்டல் முறையில் டிக்கெட் விற்பனை ஊக்குவிக்க வேண்டும். படம் தொடங்குவதற்கு முன்பும் படம் முடிந்த பின்னும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். நொறுக்கு தீனி அனுமதி கிடையாது . பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானம் மட்டுமே விற்க வேண்டும். படம் தொடங்குவதற்கு முன்னும் முடிந்த பின்னும் கொரோனா விழிப்புணர்வு பற்றிய படங்களை திரையிட வேண்டும்.
இதுபோல் பல விதி முறை கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசும் மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி முதல்வருடன் கலந்து பேசி nallaவிரைவில் நல்ல முடிவு எடுக்கும் என செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறி உள்ளார்.