Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லோக்கல்  டைம்ஸ் ( வெப் சீரிஸ் விமர்சனம் )

படம் : லோக்கல்  டைம்ஸ

நடிப்பு: பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா ஆறுமுகம், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார்

தயாரிப்பு: ஜித்தின் துரை

இயக்கம்: நவீன் ஜார்ஜ் தாமஸ்

டிஜிட்டல் யுகத்தில் அச்சு ஊடகங்கள் நடத்துவது பெரும் சுவாலாக உள்ளது   இந்த கருவை மையமாக வைத்து  லோக்கல் டைம்ஸ் 7 எபிசோட்  கொண்ட  வெப் சீரிசாக உருவாகி இருக்கிறது.

புகழ்பெற்ற  ‘நம்ம செய்தி’, வார இதழ்   டிஜிட்டல் யுகத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ள என்னவெல்லாம் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை  ஒரு குடும்ப கவுரவத்தின் பின்னணியாக அமைத்து இக்கதையை கொண்டு சென்றிருப்பது பத்திரிக்கை துறையில் ஆர்வம் உள்ளவர்களை மட்டுமல்லாமல் வெகு ஜனங்களையும் கதையோடு ஒன்று வைக்கும் காட்சிகளாக அமைந்து தனவயப்படுத்துகிறது.

பாண்டியராஜன்,  சின்ன ஜெயந்தி பிரதான வேடங்களை ஏற்க இவர்களுடன் ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா ஆறுமுகம், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் போன்றவர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
ஆங்காங்கே வரும் திருப்பங்கள், திடீர் காமெடி கலாட்டாக்கள்  எபிசோடுகளை சுவாரஸ்யமாக்குகிறது.

நான்கு நண்பர்கள் இந்த பத்திரிகையை எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பதே கதையின் கரு. பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருந்தாலும், நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு செயல்படும் இந்த நால்வரின் குழப்பமான மற்றும் நகைச்சுவையான சாகசங்கள் அடுத்து என்ன தடக்கபோகிறது  என்ற ஆர்வத்தை தூண்டுகிறது.
இவர்களுக்கு எதிராகச் செயல்படும் ஒரு பலமான எதிரியை இவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதும்  அதே உணர்வுகளை தருகிறது.

ஒவ்வொரு எபிசோடு முடியும் போதும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இறுதிக் காட்சிகள் அமைத்திருப்பது அடுத்த எபிசோடை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

சாதாரண மனிதர்களின் அசாதாரண நட்பை பேசும்  வெப் சீரிசாக லோக்கல் டைம்ஸ் வெப்சரிசை தயாரித்திருக்கிறார்  ஜித்தன் துரை.

நாயகர்கள் குறைகள் உள்ளவர்கள், பிடிவாதம் கொண்டவர்கள்; ஆனால் அவர்களின் அன்பு ஆழமானது. அவர்களின் அவசரக் குடுக்கைத் தனம் பார்வையாளர்களுக்குச் சிரிப்பைத் தரும் வகையில் எபிசோட் சுவாரஸ்யமாக இருக்கும் என்று ஏற்கனவே இயக்குனர் ஜார்ஜ் தாமஸ் குறிப்பிட்டது போல் வெப் சீரிஸ் வாரக்கடைசி நாட்களை பொழுதுபோக்காக மாற்றும் என்பதை மறுக்க முடியாது.

லோக்கல் டைம்ஸ்  வெப் சீரிஸ்  திருப்தி தரும்.

 இந்தியாவின் முன்னணி O T T  தளமான அமேசான் பிரைம் வீடியோ  தனது அடுத்த அதிரடி  படைப்பாக லோக்கல் டைப்ஸ்  தமிழ் ஒரிஜினல் மெத்தொடரை  மார்ச்  13 முதல் வெளியிட்டுள்ளது.

Review By
K. Jayachandhiran
trending cinemas now.com

Related posts

சிவி 2 ( பட விமர்சனம்)

Jai Chandran

ஐமா (பட விமர்சனம்)

Jai Chandran

டிமான்டி காலனி 2″ ZEE5ல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடம் கடந்து சாதனை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend