Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டியூட் (பட விமர்சனம்)

படம் : டியூட்

நடிப்பு: பிரதீப் ரங்கநாதன், மமிதா  பைஜு , சரத்குமார், ரோகிணி

தயாரிப்பு:; மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன்  எர்நேனி , ஒய்.ரவிசங்கர்

இசை: சாய் அபயங்கர்

ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி

இயக்கம்: கீர்த்தீஸ்வரன்

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்

டிராகன் படத்தையடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வந்திருக்கும்  புதிய படம் டியூட்

கதை: ஜாலியாக சுற்றிக்  கொண்டிருக்கும் பிரதிபீடம் அவரது மாமன் மகள்  மமிதா காதலை சொல்கிறார். சிறுவயதிலிருந்தே ஒன்றாக பழகியதால் நட்புதான் இருக்கிறது காதல் இல்லை என்று பிரதிப்  காதலை ஏற்க மறுக்கிறார். மனம் நொந்து வெளியூர் செல்கிறார் மமிதா. பிரிந்து சென்ற பிறகு அவர் மீது பிரதீப்பிற்கு காதல் பிறக்கிறது.  மீண்டும் அவரிடம் காதல் சொல்கிறார். ஆனால் பிரதீப் காதலை மமிதா ஏற்க மறுத்து வேறு ஒருவரை காதலிப்பதாக கூறுகிறார். ஆனாலும் பிரதீப்பிற்கும், மமிதாவுக்கும்  திருமணம் நடக்கிறது. இந்தநிலையில் மமிதா காதலன் இவர்களுக்கிடையே வருகிறார்.  அவர்களை  சேர்த்து வைக்க  பிரதீப்பே  முடிவு செய்கிறார். அது முடிந்ததா? ஏற்கனவே இவர்களுக்கு நடந்த திருமணம் என்னவானது என்பதற்கு காமெடியாகவும் செண்டிமெண்ட்டாகவும் பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

பிரதீப் ரங்கநாதானுக்கு அடுத்தடுத்து படங்கள் இளமை   துள்ளலாகவும், சென்டிமென்ட் டச்சுடனும் அமைந்து விடுவது அதிர்ஷ்டம்தான். அந்த அதிர்ஷ்டம் டியூட் படத்திலும் அமைந்திருக்கிறது.

தொடக்க காட்சியில் கைவிட்ட காதலியின் திருமணத்துக்கு வந்து பிரதீப் செய்யும் அலப்பறையே  மனுஷன்  என்னமோ செய்யப்போகிறான் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அங்கு அவர் செய்யும் அட்டகாசம் திருமண வீட்டையே அல்லோகலப்பட வைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறது.

மமிதா காதலை சொன்னதும்  ஏற்றுக்கொள்ளும் பிரதீப் திடீரென்று காதலை ஏற்கவில்லை என்றதும் இந்த கதை எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்பதை கணிக்க முடியவில்லை.

மமிதாவின் தந்தையாக வரும்  சரத்குமார் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தருகிறார். மகள் மீது பாசம் காட்டுவது, திடீரென்று அவரது கழுத்தை நெரித்து கொல்ல முயல்வது என இவர் வில்லனா நல்லவரா என்பது முடிவு செய்ய முடியாமல் திணறவைக்கிறது.

கொஞ்சம் அந்த ஏழு நாட்கள், கொஞ்சம் குட்டி, கொஞ்சம் லவ் டுடே டச் இருந்தாலும் கிளைமாக்சில் தாலி செண்டிமெண்டுக்கு தரும் விளக்கம் நறுக்கு தெறிக்கிறது. தாலி முக்கியமில்லை தாலிக்கு பின்னால் இருக்கும் பெண்ணின் உணர்வுக்குத்தான் மரியாதை என்ற விளக்கம் சூப்பர்..

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன்  எர்நேனி , ஒய்.ரவிசங்கர் படத்தை தயாரித்திருக்கின்றனர்.

சாய் அபயங்கர் இசை ஓ கே .

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு கலர்ஃபுல்

அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் ஜாலியான ஒரு காதல் கதையை கமர்சியல் சென்டிமென்ட் தீபாவளி இனிப்பாக வழங்கி இருக்கிறார்.

டியூட் – தேவதாஸ்களுக்கு விடிவு காலம்..

Review by :

K.Jayachandhiran

Trendingcinemasnow. com

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

மும்மூர்த்திகள் வெளியிட்ட மூன்றாம் மனிதன்  ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

புராஜெக்ட் – சி சேப்டர் 2 ( பட விமர்சனம்)

Jai Chandran

மார்வெல் ஸ்டுடியோவின் தோர் : லவ் அண்ட் தண்டர்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend