Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் பாரதிராஜா காலமானார்: திரை உலகினர் அஞ்சலி..

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இன்று காலமானார் அவருக்கு வயது 84.
கடந்த சில மாதங்களாகவே பாரதிராஜா நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார் அடிக்கடி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். அதில் அவர் குணமாகி வீடு திரும்பினார். அவருடன் மருத்துவ குழுவினர் உடன் இருந்து கவனித்து வந்தனர். ஆனாலும் இன்று காலை பாரதிராஜா வயது மூப்பின் காரணமாக காலமானார்.

இயக்குனர் பாரதிராஜா மரண தகவல் அறிந்து தமிழ் திரை உலகினர் அதிர்ச்சியில் அடைந்தனர் நீலாங்கரை வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினரும் நடிகர் நடிகைகளும் நேரில் வந்து மாலை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக முன்னாள் முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து பாரதிராஜா உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழக முதல்வர் விஜய் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டார். அதேபோல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

கடந்த 1977-ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி போன்ற பிரபல நட்சத்திரங்களை நடிக்க வைத்த இயக்குனர். கிராமிய பின்னணியில் உருவான படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது. பின்னர் கடலோரக் கவிதைகள் டிக் டிக் டிக் கொடி பறக்குது, முதல் மரியாதை உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கினார் பெரும்பாலும் எல்லா படங்களும் பெரும் வெற்றி ஈட்டியது குறிப்பிடத்தக்கது
இவர் தனது படங்களில்
நடிகைகள் ராதிகா , ராதா, மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலரின் திரையுலகப் பயணத்தில் முக்கிய பங்காற்றியவர் பாரதிராஜா. அவர் இயக்கிய முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படைப்புகளாக கருதப்படுகின்றன

இயக்குநராக மட்டுமல்லாமல், சமீப ஆண்டுகளில் நடிகராகவும் பல படங்களில் நடித்துவருகிறார். குறிப்பாக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு தாத்தாவாக நடித்த அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

Related posts

Except for two songs, RRRMovie team is done with the shoot.

Jai Chandran

Miss India crosses 100 Million views in Hindi (Dubbed)

Jai Chandran

‘NC 23’ படத்திற்காக மீனவர்களை சந்தித்த நாக சைதன்யா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend