Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தேசிய தலைவர் (பட விமர்சனம்)

படம்: தேசிய தலைவர்

நடிப்பு: ஜே எம் பஷீர் , பாரதிராஜா, ராதாரவி,, எம்.எஸ். பாஸ்கர், வாகை சந்திரசேகர், ஆர்வி உதயகுமார்

தயாரிப்பு: எஸ் எஸ் எஸ் ஆர் சத்யா, ஜெனிபர் மார்க்ரெட்

இசை: இளையராஜா

இயக்கம்: ஆர் அரவிந்தராஜ்

பிஆர்ஓ: டைமண்ட் பாபு , கே எஸ் செல்வகுமார், சாவித்திரி

தேசியத் தலைவர் படம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம். அவர் தனது வாழ்வில் மக்களுக்கு செய்த சேவை, அரசியல் பங்கேற்பு, அரசியல் தலைவர்களுடன் அவருடைய சந்திப்பு, சந்தித்த வழக்குகள், அடைக்கப்பட்ட சிறை போன்ற அவரது வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள் இப்படத்தில் படமாக பட்டிருப்பதுடன் அவரது இறுதி நாட்களும், சித்தர் போன்று அவர் மாறிய நிலையும், அமர்ந்தபடியே அவர் உயிர் நீத்த காட்சிகளும் மறக்க முடியாத வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக
ஜேஎம் பஷீர் நடித்திருக்கிறார். வேடத்திற்கு மிகவும் பொருந்திய தோற்றம் மட்டுமல்லாமல் நிதானமான ஆனால் உறுதி தன்மையுடன் கூடிய அவருடைய பேச்சு, எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து மோதும் வேகம், அரசியல் வியூகங்களில் சிக்கிக் கொள்ளாமல் தனக்கென ஒரு பாதை அமைத்து தனி கட்சி தொடங்கி அதில் பயணித்த நிஜ சம்பவங்கள், சுதந்திரப் போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உடன் இணைந்து ஆற்றிய சுதந்திரப் போராட்ட பணிகள் என எல்லா காட்சிகளிலும் பஷீர் தனது ஆழமான அமைதியான அழுத்தமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

வழக்கு தொடர்பான ஒரு சில சிக்கலான சம்பவங்களை இயக்குனர் தவித்திருப்பார் என்று எண்ணினால் அதையும் அவர் படத்தில் காட்டி கோர்ட் விசாரணைக்கு தேவர் ஆஜரானது,
சிறையில் அவர் வாழ்நாளை கடத்தியது என முக்கிய சம்பவங்களையும் நெருடல் இல்லாமல் படமாக்கியிருப்பது இயக்குனர் ஆர் அரவிந்தராஜின் அனுபவமும் அவரது திறமையும் ஒரு சேர படத்தை எந்த வில்லங்கமும் இல்லாமல் கொண்டு வந்து கண் முன் நிறுத்தி இருக்கிறது.

மகாத்மா காந்தி, நேரு, காமராஜர் போன்ற தலைவர்களுக்கான கதாபாத்திரங்களில் பொருத்தமான நபர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருப்பது நம்பும்படி உள்ளது.
பாரதிராஜா, ராதாரவி,, எம்.எஸ். பாஸ்கர், வாகை சந்திரசேகர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

தேசிய தலைவர் திரைப்படம் ரசிகர்களுக்கு தேவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு ஆவணமாக மட்டுமல்லாமல் சரித்திர படைப்பாகவும் அமைந்திருக்கிறது.

தேவர்மகன் படத்தில் இசைஞானி இளையராஜா தேவருக்காக போற்றி பாடடி பெண்ணே என்ற பாடல் காலத்துக்கும் நிலைக்கும் அளவுக்கு வழங்கி இருந்தார். தற்போது தேவரின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு அவர் இசையமைத்திருக்கிறாரென்றால் அதில் எவ்வளவு கவனம் செலுத்தி இருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடியும். படத்திற்கு இளையராஜாவின் இசை பெரும் தூணாக அமைந்திருக்கிறது.

தேசிய தலைவர் -பார்க்க வேண்டிய படம்.

 

Review By Jayachandhiran.k.

Trendingcinemasnow.com

Related posts

“ஹிட்லர்”பட முன் வெளியீட்டு விழாவில் கும்மாளம்

Jai Chandran

ஐந்தாம் வேதம் உண்மையா? டீஸர் வெளியீடு

Jai Chandran

Isari Ganesh Thank Team of Taekwondo Federation of India

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend