Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபு , வெற்றி நடிக்கும் ராஜபுத்திரன் ஆடியோ விழா

இளைய திலகம் பிரபு, எட்டு தோட்டாக்கள் வெற்றி
தந்தை மகனாக நடிக்கும் படம் ராஜபுத்திரன். இதில் நாயகியாக கிருஷ்ண பிரியா அறிமுகமாகிறார். இவர்களுடன் கோமல் குமார், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆர். வி .உதயகுமார் நடித்திருக்கின்றனர். இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார்.ஆலிவர் டெனி  ஒளிப்பதிவு செய்துள்ளார் . மவுஃபுல் ராஜா இசையமைத்ததுள்ளார். பாடல்களை வைரமுத்து, மோகன் ராஜன் எழுதியுள்ளனர். க்ரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே. எம் .சபி தயாரித்துள்ளார்.
மே மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பரணி ஸ்டுடியோவில் நடந்தது.

விழாவில் படக்குழுவினருடன் திரையுலகப் பிரமுகர்கள் நடிகர் பிரபு, கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் -விநியோகஸ்தர் கே .ராஜன், இயக்குநர் எஸ். . சந்திரசேகரன், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர்கள் வசந்த், பாண்டியராஜன், நந்தா பெரியசாமி, பேரரசு, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, , நடிகர் ஆரி, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல்,தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இப்படம் பற்றி இயக்குனர் மகா கந்தன் கூறும்போது, ‘ தந்தை மகன் இருவருக்கும் உள்ள பாசத்தை மையமாக வைத்து இக்கதை உருவாகி இருக்கிறது.  வெற்றி கதை கேட்டவுடன் நடிக்க கொண்டார்
ஆனால் பிரபு சாரை பிடிப்பதற்காக நான் கடும் முயற்சி செய்ய வேண்டி இருந்தது. தீவிர முயற்சிக்குப் பிறகு  அவரை சந்தித்து கதை கூறினேன் அவருக்கு பிடித்திருந்தது உடனடியாக ஒப்புக் கொண்டார். சின்னத்தம்பி போன்ற காலகட்ட படங்களில் பிரபு நடித்த கதாபாத்திரம் போல் ராஜபுத்திரன் படத்தில் அவரது கதாபாத்திரம் அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக குடும்பத்தினர் பெண்களுக்கு பிடிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இது முழுக்க ஒரு குடும்பப்படமாகவே உருவாகி இருக்கிறது அத்துடன் காதலும் இருக்கிறது.
இப்படத்தில் கதாநாயகியும் வெகு பொருத்தமாக அமைந்து இருப்பது மனதிற்கு திருப்தி அளிக்கிறது. படம் அனைத்து தரப்பினரரையும் கூறினார் விதமாக உருவாகியிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ” என்று கூறினார். விழா ஏற்பாடுகளை பிஆர் ஓ டைமண்ட் பாபு செய்திருந்தார்.

Related posts

ஜென்டில்வுமன் (பட விமர்சனம்)

Jai Chandran

வரும் செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்க அரசு முடிவு: அமைச்சர் தகவல்

Jai Chandran

Brad Pitt’s ‘Bullet Train’ arrives a day earlier in Indian Cinema

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend