Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ரகு தாத்தா (பட விமர்சனம்)

படம் : ரகு தாத்தா

நடிப்பு: கீர்த்தி சுரேஷ், ரவீந்திர விஜய், எம் எஸ் பாஸ்கர், தேவ தர்ஷினி, அனந்த சாமி

தயாரிப்பு: விஜய் கிரகந்தூர்

இசை: ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு:; யாமினி யக்ஞமூர்த்தி

இயக்கம்: சுமன் குமார்

பி ஆர் ஓ: யுவராஜ்

 

70, 80 காலகட்ட கதையாக உருவாகியிருக்கிறது  ரகு தாத்தா.

வங்கியில் வேலை பார்க்கும் கீர்த்தி சுரேஷ் இந்தி திணிப்புக்கு எதிராக போராடுகிறார். அத்துடன் புனைப்பெயரில் கதைகள் எழுதுகிறார். அவரது கதைகளை படித்துவிட்டு பின் தொடர்கிறார் ரவீந்திர விஜய். இதற்கிடையில் கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து கொள்ள குடும்பத்தினர் வற்புறுத்துகின்றனர். ஆனால் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று கீர்த்தி பிடிவாதம் பிடிக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை புரிந்து கொண்ட ரவீந்தராவை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். ஆனால்  ரவீந்திரா பெண் அடிமைத்தனம் கொண்டவர் என்பதை அறிந்த கீர்த்தி அவரை திருமணம் செய்யாமல். நழுவ பல சித்து வேலைகளை செய்கிறார். அவரால் அது முடிந்ததா என்பதை நகைச்சுவையாக சொல்கிறது கிளைமாக்ஸ்.

ஹிந்தி தெரியாது போயா என்று  ட்ரெய்லரில் கீர்த்தி சுரேஷ் போராடுவதை பார்த்து இது ஹிந்தி திணிப்புக்கு  எதிரான படம் என்று எண்ணினால் அது ஒரு வகையில் உண்மைதான் அதே சமயம் முழுக்க முழுக்க அதையே கருவாக வைத்து விடாமல் கீர்த்தியின் திருமண கலாட்டாவை இயக்குனர் சுமன் திரைக்கதை. யோடு இணைத்திருப்பது நகைச்சுவையாக காட்சிகளை நகர்த்த உதவி இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் துணிச்சல் பெண்ணாக  நடித்திருக்கிறார். வீட்டில் திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினர் வற்புறுத்தும் போது திருமணம் செய்து கொள்ள முடியாது, பெண்ணாக அடக்கம் ஒடுக்கமாக இருக்க முடியாது என்று  வசனம் பேசும்போது பிடிவாதம் காட்டுகிறார்.

ரவீந்திர விஜய்யை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் கீர்த்தி சுரேஷ் ஒரு கட்டத்தில் அவர் பெண்ணடிமை தனத்தை ஊக்குவிப்பவர் என்று தெரிந்ததும் திருமணத்தை நிறுத்த கீர்த்தி செய்யும் அல்சாட்டியங்கள் நகைச்சுவை காட்சிகளுக்கு உதவி இருக்கிறது. இந்த காட்சிகளுக் காக கிரேசி மோகன் பாணியில் காட்சிகளை அமைத்திருந்தால் அரங்கமே  சிரிப்பலையில் அல்லோகல்லப்பட்டிருக்கும்.

ரவீந்திர விஜய் 80ஸ் காலத்து காஸ்டியூமுடன் வந்து நல்ல பிள்ளை போல் பாவனை செய்து நடிப்பது ரசனை. அதேசமயம் அவரது பிற்போக்குக்கான புத்தியை மறுபுறம்  காட்டி பிற்போக்குவாதிக ளுக்கு செருப்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுமன் குமார்.

எம் எஸ் பாஸ்கர் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார். வழக்கமாக கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்தாலும் ஸ்கோர் செய்து விடுவார் ஆனால் இதில் அவர் அதை மிஸ் செய்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷின் தோழியாக வரும் தேவதர்ஷினி காமெடிக்கு உதவி இருக்கிறார்.

விஜய் கிரக்கந்தர் படத்தை தயாரித்திருக்கிறார். தமிழில் தயாரிக்கும் முதல் படம் என்பதால் மீடியம் பட்ஜெட்டில்  படத்தை தயாரித்து மீடியமான லாபம் பார்க்க எண்ணியிருக்கிறார்.

ஹிந்தியில் பாப்புலர் சீரியல்களை அளித்த சுமன் குமார் இப்படத்தை தென்னிந்திய பாணிக்கு ஏற்ப காட்சிகளை அமைத்து கவர முயற்சித்திருக்கிறார்.

ஷான் ரோல்டன் இசை மென்மை.

யாமினி யக்ஞமூர்த்தி கேமரா 80ஸ் காலகட்டத்தை கச்சிதமாக பதிவு செய்திருக்கிறது.

ரகு தாத்தா – கலகல தாத்தா

 

 

 

 

Related posts

திருப்பதி பிரதர்ஸ் வெளியிடும் “பிகினிங்”

Jai Chandran

பொன் மாணிக்கவேல் (பட விமர்சனம்)

Jai Chandran

கமல் ரசிகர்கள் 4 லட்சம் யூனிட் ரத்த தானம்.. 40 வருட சாதனை..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend