Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டிமான்டி காலனி 2ம் பாகம் ( பட விமர்சனம்)

Lபடம்:  டிமான்டி காலனி 2ம் பாகம்

நடிப்பு: அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆன்டி ஜாஸ்கெலைன் டிசெரிங் டோர்ஜி, அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலிட், அர்ச்சனா ரவிச்சந்திரன்

தயாரிப்பு: பாபி பாலச்சந்திரன், விஜய் சுப்பிரமணியன், ஆர் சி ராஜ்குமார்,

இசை: சாம் சி எஸ்

ஒளிப்பதிவு: ஹரிஷ் கண்ணன்

இயக்கம்: அஜய் ஞானமுத்து

ரிலீஸ்: ரெட் ஜெயன்ட் மூவிஸ்

பி ஆர் ஓ:  யுவராஜ்

அருள்நிதி நடித்த டிமான்டி காலனி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக டிமான்டி காலனி இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.

முதல் பாகத்திலேயே பிரதான கதாபாத்திரங்களான அருள்நிதி உள்ளிட்டவர்கள் இறந்த நிலையில் இரண்டாம் பாகத்தை எப்படி உருவாக்க முடியும் என்ற கேள்வி யுடன் இப்படம் உருவாகி இருக் கிறது. அதற்கு  புதிய வடிவம் கொடுத்து இயக்கியிருக்கிறார். அஜய் ஞானமுத்து.

முதல் பாகத்தில் இறந்ததாக கருதப்பட்ட அருள்நிதி மீட்புக் குழுவால் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்படுகிறார். அவரை டிமான்டி காலனி பேய் பிழைக்க விடாமல் தடுக்கிறது. அவரை மீட்பதற்காக வருகிறார்  இன்னொரு  சகோதரர் அருள்நிதி. அவருக்கு உதவியாக வருகிறார் பிரியா. உயிருக்கு ஆபத்தான நிலைதில் இருக்கும் அருள்நிதியை காப்பாற்ற சக்தி வாய்ந்த  புத்தபிட்சுகள் உதவியை நாடுகின்றனர். அவர் டிமான்டி காலனி பேயை விரட்ட யாகம் செய்கிறார். இந்த போரில் தோற்றது யார்? வென்றது யார்? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

படம் தொடங்கியவுடன் முதல் பாகத்தை ஞாபகப்படுத்தும் வகையில் அதிலிருந்து சில காட்சிகள் இடம்பெறுகின்றன பின்னர் பெரும் கோடீஸ்வரர் சொத்துக்கு பங்கு போடும் கதையாக மாறுகிறது.

ப்ரியா பவானியின்  காதலன் திடீரென்று தூக்கு போட்டு இறக்க அவனது ஆவியுடன் பேச பிரிய முயற்சிக்க அது வம்பில் போய் முடிகிறது. புதிய ஆவி ஒன்று பிரியாவை துரத்துகிறது.

மாடியில் இருந்து விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அருள்நிதியை காப்பாற்ற அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் பிரியா. ஆனால் சொத்துக்காக அவரைக் கொல்ல  வருகிறார் மற்றொரு அருள்நிதி. இந்தப் போராட்டம் இடைவேளை வரை செல்கிறது.  இதற்கிடையில் பேயாட்டம் அமானுஷ்யம், புத்த  பிட்சுகளின் மந்திர தந்திரங்கள் என காட்சிகள்  நீள்கிறது.

மீண்டும் டிமான்டி காலனி  ஆன்ட்டி ஜாஸ்கொலைன் வெள்ளைக்கார பேய் எப்போது வரும் என்று திக் திக் அதிகரிக்க தூரத்தில்  துப்பாக்கியால் தரையை குத்தும் அந்த டங் டங் சத்தம்  ஆரம்பித்த உடன் பதட்டமும் ஆரம்பமாகி விடுகிறது.

நடிகர்களுக்கு இதில் நடிக்க ஒரே வாய்ப்பு பேயை பார்த்து பயப்படுவது மட்டும்தான்.   பிரியா பவானி கண்களை உருட்டி உருட்டி மிரட்சியாக பார்க்கிறார், , ஆனால் முகத்தில் பயத்தை வெளிக் காட்டாதது மைனஸ். கதாபாத் திரத்தில் அவர் முழு ஈடுபாடு காட்டவில்லையோ என்று தோன்றுகிறது. புத்த பிட்சுகள் கொஞ்சமாக நடித்திருக்கின்றனர்.

அருள்நிதிக்கு கடினமான காட்சிகள். கட்டிலில் படுத்தபடி அந்தரத்தில் மிதக்கிறார், சேர்களை ஏணி போல் அடுக்கி அதிலிருந்து கீழே விழுகிறார் இப்படி சில ஸ்டண்ட் காட்சிகள் அவரை காப்பாற்றுகிறது.

பாபி பாலச்சந்திரன், விஜய் சுப்ரமணியன், ஆர்.சி.ராஜ்குமார் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

அஜய் ஞானமுத்து இரண்டாம் பாகத்தை எப்படி தொடங்குவது  என்று திணறி அதற்கான ஒரு பலமான முடிச்சை தற்போது போட்டிருக்கிறார். இரண்டாம் பாகம் படபடப்புடன் முடிந்து மூன்றாம் பாகத்திற்கும் ஒரு லீட் கொடுத்திருப்பது அவரது வேகத்தை காட்டுகிறது.

பேய் படத்தில் சமீப காலமாக ஒரு கவர்ச்சி பாடல் பெரிய பிளஸ்ஸாக அமைகிரது.   அப்படி ஒரு கமர்சியல் பாடலை மூன்றாம் பாகத்திலாவது இயக்குனர் சேர்த்தால் அது வர்த்தகத்துக்கு பலமாக இருக்கும்.கூடுதலாக காமெடி சைட் டிராக்கையும் கருத்தில் கொள்க.

ஹரிஷ் கண்ணன் படத்தை கலர்ஃபுல்லாக படமாக்கி இருக்கி றார். பேய்கள் இருந்தாலும் அந்த பயம் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்துவிடாமல்  சிறுவர்களையும் ரசித்துப் பார்க்கும்படி காட்சிகளை படமாக்கி இருப்பது நலம்.

சாம் சி எஸ் இசை படத்திற்கு பூஸ்ட்.

ரெட்ஜெட் நிறுவனம் படத்தை வெளியிட்டிருக்கிறது.

டிமான்டி காலனி 2 – வெள்ளைக்கார பேயின் தொடர் அட்டகாசம்.

 

 

 

 

 

 

Related posts

Trident Arts has acquired the Theatrical Rights of Yaaro

Jai Chandran

குழந்தையின்மை பற்றி பேசும் “வெப்பம் குளிர் மழை” மார்ச் 29ல் ரிலீஸ்

Jai Chandran

நடிகர் சக்ரவர்த்தி காலமானார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend