Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மின்மினி (படவிமர்சனம்)

படம்: மின்மினி

நடிப்பு: பிரவீன் கிஷோர், கௌரவ் காளை, எஸ்தர் அனில்

தயாரிப்பு: ஸ்டேஜ் அண்ட் ரியல் பேபி ஷூ ப்ரொடக்சன்

இசை: கதீஜா ரஹமான்

ஒளிப்பதிவு: மனோஜ் பரஹம்சா, அபிநந்தன், ராமானுஜம்

இயக்கம்: ஹலிதா ஹமீம்

பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா

ஊட்டி கான்வென்ட்டில் படிக்கும் மாணவர்கள் இருவர் இடையே அடிக்கடி சிறுசிறு மோதல்கள் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த மோதல் முடிந்து இருவரும் நண்பர்களாகிறார்கள். இந்நிலையில் விபத்து ஒன்றில் நண்பர்கள் இருவரில் ஒருவன் இறக்க அவனது உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது. அவனது இதயத்தை தானமாக பெற்ற இளம்  பெண் ஊட்டி கன்வென்ட்டில் படிக்க வருகிறார். நண்பனின் ஆசையை.  நிறைவேற்ற இன்னொரு நண்பன் முயலும் நிலையில் காஷ்மீர் பயணமாகின்றனர். அங்கே நடக்கும் எதிர்பார்க்காத திருப்பங்கள் படத்தை புதிய கோணத்திற்கு கொண்டு சென்று நிறுத்துகிறது.

நடிகர்கள் பிரவீன் கிஷோர், கௌரவ் காளை, எஸ்தர் அனில்  மூவருமே புது முகங்கள் என்றாலும் நடிப்பில் எதார்த்தத்தை காட்டி உணர்வுகளை பகிர்ந்திருப்பது காட்சிகளை நிஜமாக்குகிறது.

எதிர்பார்க்காத பஸ் விபத்தில் கௌரவ் இறந்த பிறகு கதையை எப்படி கொண்டு செல்லப் போகிறாரோ இயக்குனர் என்று ஷாக் ஏற்படும்போது அதை நேர்த்தியாக கொண்டு சென்ற விதம் கதைக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி தருகிறது.

காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் ரம்யமாக உள்ளதுடன் கண்ணுக்குள் சில்லென்று காற்று வீசுகிறது.

இப்படத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் இதில் நடித்திருக்கும் இளைஞர்jகளின் சிறுவயது காட்சிகள் அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது படமாக்கப்பட்டு பின்னர் இளமைக் கால காட்சிகளுக்காக அதே இளைஞர்கள் வளரும் வரை எட்டு  வருடங்கள்  காத்திருந்து காட்சிகளை இயக்குனர் படமாக்கி இருப்பது சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத முயற்சி.

வன்முறை கதைக்களங்கள் தான் தற்போது தமிழ் சினிமாவின் தலையெழுத்தாக இருக்கிறது இதற்கிடையில் மின்மினி போன்ற இதமான காதலை நட்பை சொல்லும் படங்கள் வந்து ரசிகர்கள் மனதை தாலாட்டுவது பாராட்டத்தக்கது.

சில்லுகருப்பட்டி ஏலே போன்ற மாறுபட்ட படங்களை வழங்கிய இயக்குனர் ஹலிஜா ஹமீம்  மின்மினி படத்தையும் தனது பாணி மாறாமல் வித்தியாசமாக தந்திருக்கிறார்.

கதீஜா ரஹ்மான் இசை  காட்சிகளை சத்தம் போட்டு உடைத்தெறியாமல்  மென்மையை கையாண்டு  ஒன்றிணைத்திருக் கிறது.

மின்மினி – இதயத்தை இதமாக்கும்.

 

 

 

 

 

Related posts

ThattaanThattaan from #Karnan to be released 5 PM tomorrow

Jai Chandran

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளில் கமல்ஹாசன் செலுத்திய வணக்கம்

Jai Chandran

துப்புரவு பணியாளர்களுக்கு பிரம்மகுமாரிகள் வரவேற்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend