Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அந்தகன் (பட விமர்சனம்)

படம்: அந்தகன்

நடிப்பு: பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கே எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, யோகிபாபு, மனோபாலா,  ஆதம் பாலா, பெசன்ட் ரவி,

தயாரிப்பு: சாந்தி தியாகராஜன்,  ப்ரீத்தி தியாகராஜன்

இசை: சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு: ரவி யாதவ்

இயக்கம்: தியாகராஜன்

பி ஆர் ஓ: நிகில் முருகன்

லண்டன் சென்று பியானோ இசைக் கலையில் புகழ் பெற வேண்டும் என்று விரும்புகிறார் பிரசாந்த். பார்வையற்றவராக உலாவரும் அவரைக் கண்டு பிரியா ஆனந்த் அன்பு கொள்வ துடன்  காதலியாகவும் மாறுகிறார். இந்நிலையில் பிரசாந்தை சந்திக்கும் கார்த்திக் தன் திருமண நாளில் வீட்டிற்கு வந்து தன் பாடலை  பியானோவில் இசைக்கும்படி கேட்கிறார். அதை ஏற்று கார்த்திக் வீட்டுக்கு பிரசாந்த் வரும்போது அங்கு அவர் சுடப்பட்டு இறந்து கிடக்கிறார். பார்வையற் றவர் என்று எண்ணப்பட்ட பிரசாந்துக்கு உண்மையில் பார்வை தெரியும்.  கார்த்க்திகை தாங்கள் சேர்ந்து கொன்ற விஷயம் பிரசாந்த்துக்கு தெரியும் என்பதை அறிந்து அதிர்ச்சி அடையும்  சிம்ரன், சமுத்திரக்கனி இருவரும் பிரசாந்தை தீர்த்துக்கட்ட திட்டமிடுகின்றனர். ஒரு கட்டத்தில் பிரசாந்துக்கு உண்மையிலேயே பார்வை இழப்பை ஏற்படுத்து கிறார் சிம்ரன்.  இந்நிலையில் பிரசாந்த்தை டாக்டர் குழு ஒன்று கடத்திச் சென்று கிட்னி திருட முயல்கிறது. அதிலிருந்து பிரசாந்த் தப்பித்தாரா?  கார்த்திக்கை கொன்ற சமுத்திரக்கனி,  சிம்ரன் கதி என்னவானது? கிட்னி திருடும் டாக்டர்  கே எஸ் ரவிக்குமார் என்னவாகிறார் என்ற பல கேள்விகளுக்கு சஸ்பென்ஸ் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து பதில் அளிக்கிறது அந்தகன்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறார் பிரசாந்த். அந்தகன் படத்தில் பார்வையற்ற வராகவும் பார்வை உள்ளவராகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பியானோ இசைக் கலைஞராக பிரசாந்த் நடித்திருந்தாலும் உண்மையிலேயே அவர் பியானோ இசைக்கத் தெரிந்த ஒரு கலைஞர். நிஜ கலைஞர் என்பதால் அவரால் படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நிஜமாகவே வாழ முடிந்திருக் கிறது.

சிம்ரன் வீட்டுக்கு பிரசாந்த் என்ட்ரி கொடுத்த பிறகு படத்தில் சஸ்பென்ஸ் தொடங்கி விடுகிறது. கார்த்திக் சுட்டுக் கொல்லப்பட்டு கிடப்பதை கண்டு பிரசாந்த் அதிர்ச்சி அடைந்தாலும் பார்வை யற்றவராக அங்கு நடிக்க வேண்டி இருப்பதால் சிம்ரனுக்கும் சமுத்திரக்கனிக்கும் தான் பார்வையற்றவன் என்பதை நிரூபிக்க அந்த இடத்தில் ஒன்றையும் பார்க்காதது போல் முகபாவனையை வைத்துக் கொள்வதும்,  ஆனாலும் சமுத்திரகனி பிரசாந்தை சந்தேகக் கண்ணுடன் பார்ப்பதும் அதேபோல் சிம்ரன் பதற்றத்தில் உலவுவதும் காட்சியை பரபரபாக்குகிறது.

பிரசாந்துக்கு பார்வை தெரியும் என்ற உண்மை சிம்ரனுக்கும் சமுத்திரக்கனிக்கும் தெரிந்த பிறகு அவரை கொல்ல இருவரும் போடும் திட்டங்கள்  மிஸ்ஸாகி வெவ்வேறு திசையில் பயணித்து  கிட்னி திருடும் கே எஸ் ரவிக்குமார் கூட்டத்திடம் சிக்கி திணறுவது எதிர்பாராத ட்விஸ்ட்.

பிரசாந்த்தை  கார் ஏற்றி கொல்ல. சிம்ரன்  முயலும் காட்சி திடுக்கிட வைக்கிறது. சிம்ரன் முழுக்க முழுக்க வில்லியாகவே மாறிவிட்டார் .

சிம்ரனை தவிர வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்தில் இவ்வளவு நேர்த்தியாக நடித்திருக்க வாய்ப்பில்லை என்று இயக்குனர் தியாகராஜன் பேட்டிகளில் சொன்னது எவ்வளவு நிஜம் என்பதை படம் பார்க்கும்போது உணர முடிகிறது.

பிரியா ஆனந்த் அழகு பதுமையாக வருகிறார். இளைஞர்களுக்காக கொஞ்சம் கவர்ச்சி விருந்து படைக்கிறார்.

கிட்னி திருடும் டாக்டராக கே எஸ் ரவிக்குமார் நடிக்க அவருக்கு உதவும் ஆட்டோக்காரராக யோகி பாபு நடித்துள்ளார். போலி லாட்டரி டிக்கெட் விற்கும் பெண்ணாக ஊர்வசி நடிப்பை ஊதி தள்ளி இருக்கிறார்.

சமுத்திரக்கனியின் வில்லத்தனம் அவரது மனைவியாக வரும் வனிதாவின் ஆக்ரோஷம் எல்லாம் கூடுதல் பிளஸ்.

அந்ததூன் என்று  இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற இப்படத்தை தமிழில் அந்தகனாக முற்றிலும் புதிய கோணத்தில் படமாக்கி இருப்பது இயக்குனர்  தியாகராஜனின் புத்திசாலித் தனத்தை வெளிப்படுத்துகிறது. எந்த காட்சியிலும் விறுவிறுப்பு குன்றாமல் பார்த்துக் கொண்டு கிளைமாக்ஸ் வரை சஸ்பென்சாக  கொண்டு சென்றிருப்பதும், காட்சிகளை ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இயக்கியி ருப்பதும் ஏன் இவர் அதிக படங்களை இயக்காமல் இருக்கி றார் என்ற கேள்வியை தான் எழுப்புகிறது.

ஊர்வசி,  யோகிபாபு ஒரு பக்கம் காமெடி கூத்தடிக்க மற்றொருபுறம் மனோபாலா வசனத்திலேயே பஞ்ச் அடித்து அரங்கை சிரிப்பில் அலற விடுகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஒவ்வொரு பாடலும் தாளம் போட வைக்கிறது.

ரவி யாதவ் ஒளிப்பதிவு காட்சிகளை கண்ணாடிபோல் பளபளக்க வைக்கிறது.

பிரசாந்தின் 50வது படமாக உருவாகியிருக்கும் இப்படம் அவரது  வெற்றி பட வரிசையில் இணையும்.

அந்தகன் – சஸ்பென்ஸ் திரில்லர் காமெடியுடன் கூடிய  அசத்தல் படம்.

 

 

 

 

Related posts

வார் 2 இரண்டு நாளில் இந்தியளவில் ரூ.115 கோடி வசூல்

Jai Chandran

ராமம் ராகவம் படத்தின் கதை என்ன? சமுத்திரக்கனி விளக்கம்

Jai Chandran

பனோரமாவில் தேர்வான தமிழ்திரைப்படம் “கிடா” !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend