Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அக்கரன் ( பட விமர்சனம்)

படம்: அக்கரன்

நடிப்பு: எம் எஸ் பாஸ்கர் கபாலி விஸ்வநாத, நமோ நாராயணா,  வெண்பா,

தயாரிப்பு: கே கே டி

இசை: எஸ் ஆர் ஹரி

ஒளிப்பதிவு: எம் ஏ. ஆனந்த்

இயக்கம்: அருண் கே பிரசாத்

பி ஆர் ஒ: சதீஷ் (AIM)

 

எம் எஸ் பாஸ்கர் தனது இளைய மகளை டாக்டருக்கு படிக்க வைக்க எண்ணுகிறார். அதற்காக நீட் கோச்சிங் சென்டருக்கு அனுப்பு கிறார். திடீரென்று அவரது மகள் காணாமல் போகிறார்.  இது பற்றி போலீசில் புகார் தருகிறார். விசாரணையில் மகள் கொல்லப்பட்ட விவரம் தெரிய வருகிறது. ஆசை ஆசையாக வளர்த்த மகளை கொன்றவர்களை பழிவாங்க எம் எஸ் பாஸ்கர் புறப்படுகிறார் அதன் பிறகு நடப்பது என்ன என்பதை சஸ்பென்ஸ் திரில்லராக படம் விளக்குகிறது.

இப்படத்தில் பிரதான வேடத்தில் எம் எஸ் பாஸ்கர் நடித்திருக்கிறார். இரண்டு மகள்களுக்கு தந்தையாக வரும் அவர் திடீரென்று ஆக்சன் ஹீரோ ரேஞ்சுக்கு மாறிவிடு கிறார்.  தன் மகளை கொன்றவர் களை பழி வாங்குவதற்காக நீட் கோச்சிங் சென்டர் நடத்தும் நபர்களை கடத்தி தனி அறையில் அடைத்து  வைத்து அவர்களிடம் உண்மையை வரவழைக்க அவர்களின  விரல்களை துண்டு துண்டாக வெட்டி கொடூர வில்லத்தனத்தை காட்டுகிறார்.

இந்த வயதில் இவ்வளவு கோபமும் ஆக்ரோஷம் எம் எஸ் பாஸ்கரால் எப்படி காட்டி நடிக்க முடிகிறது என்ற ஒரு சந்தேகம் எழுகிறது அதற்கான விடை ஒன்றையும் கிளைமாக்ஸில் சொல்வது காட்சிகளை சமரசமாக்குகிறது.

தற்போதைக்கு எம் எஸ்.பாஸ்கரை. விட்டால்  யாரும்.இல்லை என்பதுபோல் எல்லாபடங்களிலும் அவரை காண முடிகிறது. ஒரே பாணியிலான அவரது ஓவர் ஆக்டிங் நடிப்பு அலுப்பு தட்டுகிறது

நமோ நாராயணன் அரசியல்வாதியாக வந்து. வழக்கமான தனது நடிப்பை வழங்கி இருக்கிறார்.

அக்கரன் என்று படத்திற்கு இயக்குனர் டைட்டில் வைத்திருக்கிறார் புரியாதபடி டைட்டில் வைப்பது தான் தற்போதைய டிரெண்டாக இருக்கிறது. ஏதோ ஒரு அக்கிரமத்தை தட்டி கேட்கும் நபரின் கதை என்பதை தான் மேலோட்டமாக இந்த டைட்டில் உணர்த்துகிறது.

படத்தில் ரிலாக்ஸ் செய்வதற்காக எந்த காட்சிகளும் இல்லாதது மைனஸ்..

கே கே டி இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

எஸ் ஆர் ஹரி இசையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.

எம் ஏ ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரே நேர்கோட்டில் படத்தை இயக்கியிருக்கிறார் அருண் கே பிரசாத். டாக்டருக்கு படிக்க  பயிற்சி தரும் நீட் பயிற்சி சென்டரின் அவலத்தை லேசாக தொட்டு பின்னர் அதில் இருந்து நழுவிச் சென்றிருப்பது கொஞ்சம் ஏமாற்றம் தான்.

அக்கரன் – ஒரு தந்தையின் ஆவேசம்.

Two And A Half Star Rating Illustration Vector

 

 

 

 

Related posts

Actor Sai Siddarth – The arrival of Super-Villain in K-Town

Jai Chandran

அறம் செய் படம் பார்த்து திருமா பாராட்டு

Jai Chandran

Nandamuri Balakrishna Completes Dubbing For Aganda2

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend