Trending Cinemas Now
Uncategorized

ரேசர் பட இயக்குனர் இயக்கத்தில் அதிரடி கேங்ஸ்டர் படம்

ரேசர் பட இயக்குனர் இயக்கத்தில் அதிரடி கேங்ஸ்டர் படம்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்த புதிய படம்

என் கவுன்டர் கேங்ஸ்டர் கதை படமாக்கும் சதீஷ்

 

மோட்டார் பைக்குகளை வைத்து வித்தியாசமான ரேசர் படத்தை இயக்கி அளித்த  சதீஷ் என்கிற ஷாட்சர்ஸ் ( satzres) அடுத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி என்கவுன்டர் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து நடக்கும் கேங்ஸ்டர் கதையை படமாக்குகிறார். உண்மை சம்பவத்துடன் கற்பனையும் சேர்த்து பக்கா அதிரடி ஆக்ஷ்ன் கதையாக  இது  உருவாகிறது.

ரேசர் படத்தை தயாரித்த ஹஸ்லர்ஸ் (Huselers) என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட்செளவில் இப்படத்தை தயாரிகக்கிறார்.  புரொடக்ஷன் நம்பர் 2 ஆக உருவாகும் இப்படத்திற்கு விரைவில் டைட்டில் அறிவிக்கப்பட்ட உள்ளது.

விக்கி மேக் ஒளிப்பதிவு செய்கி றார். பரத் இசைய மைக்கிறார்.  மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. பிஆர் ஓ வேலு.

இப்படத்தில் கதாநாயகனாக அகில் சந்தோஷ் நடிக்கிறார். கதாநாயகியாக பர்வீன் நடிக்க உள்ளார். முக்கிய வேடத்தில் அருள்தாஸ் நடிக்கிறார். மேலும் சில்மிஷம் சிவா,  சிவம் ,  அருள் உதயன் குட்டி கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இதன் தொடக்க விழா புதுச்சேரியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலில் நடக்கிறது  புதுச்சேரி மாண்புமிகு  முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார்  தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் நடக்கின்றன.

சுமார் 50 ஏக்கருக்கு மேற்பட்ட அடர்ந்த காட்டுப்பகுதியில்  படத்தின் படப்பிடிப்பு நடக்க உளளது

 

 

 

 

Related posts

கிளாஸ்மேட் (பட விமர்சனம்)

Jai Chandran

ரெட் சேண்டல்.வுட் (பட விமர்சனம்)

Jai Chandran

சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ரசவாதி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend