படம்: சபரி
நடிப்பு: வரலட்சுமி, மைம் கோபி, கணேஷ் வெங்கட்ராமன், ஷஷாஙக்
தயாரிப்பு: மகேந்திரநாத் கொண்டாலா
இசை: கோபி சுந்தர்
ஒளிப்பதிவு: ராகுல்
இயக்கம்: அனில் கட்ஸ்
பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா (D one)
தாய் மீது பாசம் வைத்திருக்கிறார் வரலட்சுமி. திடீரென்று அவரது தாய் இறந்து விட தந்தை வேறு திருமணம் செய்து கொண்டு வருகிறார். சித்தி மீது வரலட்சுமிக்கு கோபம் ஏற்படு கிறது. வளர்ந்த பின் தான் காதலித்த நபருடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் வரலட்சுமி. இவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. இந்நிலையில் கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை அறிந்து கணவனிடம் இருந்து விலகும் வரலட்சுமி குழந்தையை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் அந்த குழந்தையை கடத்த மர்ம நபர் ஒருவர் பின் தொடர்கிறார். அவரிடமிருந்து குழந்தையை வரலட்சுமியால் காப்பாற்ற முடித்ததா? மீண்டும் கணவனுடன் அவர் சேர்ந்தாரா? என்ற கேள்வி களுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
படம் முழுக்க வரலட்சுமி ஆக்கிரமித்து இருக்கிறார். அவரைப் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கிறது.
மும்பையில் இருந்து தனது மகளுடன் சென்னை வரும் வரலட்சுமி பல்வேறு கம்பெனி களில் வேலை தேடி அலைவது அங்கே சிலர் அவரது பெண்மையை விலை பேசுவது சமூக அவலத்தை பிரதிபலிக் கிறது.
தான் வளர்க்கும் மகள் தனக்கு பிறந்த குழந்தை இல்லை என்று தெரிந்ததும் அதற்காக வளர்த்த குழந்தையின் மீது பாசம் குறையாமல் அதே பாசத்துடன் வரலட்சுமி தொடர்வது வலு சேர்க்கிறது.
மகளை காப்பாற்றுவதற்காக வரலட்சுமி நடத்தும் போராட்டத்தில் எதார்த்தம் இருக்கிறது. நல்ல வேளையாக விஜய் சாந்தி ரேஞ்சுக்கு பறந்து பாய்ந்து சண்டை போடாமல் தனது போராட்டத்தை ஒரு தாயின் பாச போராட்டமாக வெளிப்படுத்தி இருப்பது நம்பகத்தன்மையை அதிகமாக்குகிறது
படத்தில் மைம் கோபி ஒரு சஸ்பென்ஸ் பாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.அவர் இறந்து விட்டாரா அவரது ஆவி தான் வரலட்சுமியை துரத்துகிறதா என்ற கேள்விக் கெல்லாம் ஒரு கட்டத்தில் விடை கிடைக்கும்போது மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.
வரலட்சுமி கணவராக நடித்தி ருக்கும் கணேஷ் வெங்கட்ராமன் நல்லவரா கெட்டவரா என்பதை கணிக்க முடியாத அளவுக்கு தனது கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.
வரலட்சுமிக்கு ஆதரவாக வக்கீல் ராகுல் வேடத்தில் ஷஷாங்க் நடித்திருக்கிறார்.
மகேந்திரநாத் கொண்டாலா படத்தை தயாரித்திருக்கிறார்.
இயக்குனர் அனில் கட்ஸ் கணவன் மனைவிக்குள் நடக்கும் ஈகோ போராட்டத்தை ஒரு சஸ்பென்ஸ் த்ரிலாக தர முயன்றிருக்கிறார். ஆனால் கதையை ஹாரர் பாணியில் இயக்குவதா. அல்லது சஸ்பென்ஸ் திரில்லராக இயக்குவதா என்ற குழப்பத்தில் தள்ளாடி இருப்பது திரைக் கதையில் தெரிகிறது.
கோபி சுந்தர் இசையில் புதுமை இல்லை. ராகுல் ஒளிப்பதிவு நேர்த்தி.
கதையும் காட்சிகளும் நீண்டு கொண்டே செல்வதால் சோர்வு ஏற்படுகிறது. இன்னும் பத்து நிமிட காட்சிகளை குறைத்தால் ஸ்கிரிப்பான ரிசல்ட் கிடைக்கும்.
சபரி – மகளுக்காக தாய் நடத்தும் போராட்டம்.