Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மொரிஷியஷ் முன்னாள் ஜனாதிபதி மறைவுக்கு அபிராமி ராமநாதன் இரங்கல்

மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், பிரதமராக இருந்தவருமான சர்.அனிரூத் ஜெகனாத் காலமான தகவலை அறிந்து அபிராமி ராமநாதன் வருத்தம்.

2007 ம் ஆண்டு ஜீன் மாதம் சூப்பர் ஸ்டார் *ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஏவி.எம்.தயாரிப்பில் வெளியான படம் சிவாஜி.. இப்படம் வெளியான நேரத்தில் அன்றைய மொரிஷியஸ் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த சர்.அனிரூத் ஜெகநாத் அலுவல் காரணமாக சென்னைக்கு வந்த அவர் சிவாஜி படம் பார்க்க விரும்பினார்.

இதுகுறித்து சிவாஜி 0படத்தின் பிரபல சென்னை விநியோகஸ்தர் .அபிராமி ராமநாதன்  தகவல் வரவே உடனடியாக மொரிஷியஸ் ஜனாதிபதி படத்தை பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார்.

 

படம் பார்ப்பதற்காக பிற்பகல் 3 மணியளவில் மொரிஷியஸ் ஜனாதிபதி  சர்.அனிரூத் ஜெகநாத் மற்றும்  அவருடைய குடும்பத்தினரும் வருகை தந்த போது அவர்கள அபிராமி ராமநாதன்,  நல்லம்மை ராமநாதன், ஜி.வி.பிலிம்ஸ் வெங்கட்ரமணி   சேர்ந்து வரவேற்றனர். இனிமையான இந்த தருணத்தை மறக்க முடியாத நாள் என்று சொல்லலாம் சிவாஜி படத்தை அவரும்,அவரது குடும்பத்தினரும் விரும்பி பார்த்து ரசித்தனர்.

இந்நிலையில் மொரிஷிய முன்னாள் ஜனாதிபதி தற்போது இறந்த தகவல் வெளியானது. இதையறிந்து  அவரது மறைவுக்கு அபிரமி ரமநாதன் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்திருக்கிறார்.

Related posts

Velmurugan appointed as temple trustee..

Jai Chandran

கர்ணன் பட பாடல் வரி மாற்றம் செய்த இயக்குனர்: எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி..

Jai Chandran

பிரபு – வெற்றி – கிருஷ்ண பிரியா நடிக்கும் ஆண் மகன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend