Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஸ்டாலின் முதல்வராக நாக்கை அறுத்துக்கொண்ட பெண்: திமுக தலைவர் கண்ணீர் அறிக்கை

கடந்த 10 வருடமாக ஆட்சி யில் இல்லாமல் எதிர்க் கட்சியாக திமுக இருந்து வந்தது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களை திமுக கூட்டணி பிடித்து ஆட்சியை பிடித்திருக் கிறது. திமுகவினர் அமைதி யாக தங்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். வரும் 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க விருக்கிறார். இந்நிலையில் அவரை நடுங்க வைத்த சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் பொதுவாக்குடி கிராமத்தை சேர்ந்த பெண் வனிதா. இவரது கணவர் கார்த்திக்.
32 வயதான வனிதா திமுக பற்றாளர். இந்த தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டா லின் முதலமைச்சராக வேண்டும் என்று பரமக்குடி முத்தாரம்மன் கோவிலில் வேண்டிக்கொண்டிருந்தார். சமீதத்தில் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில் திமுக அமோக வெற்றி பெற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகிறார். இதையறிந்த வனிதா தான் வேண்டிக்கொண்டபடி முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து தனது நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திவிட்டு ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி விழுந்தார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்த தகவல் பத்திரிகை. மீடியாக் களில் பரபரப்பாக வெளி யானது.
திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் இதையறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர் வெளி யிட்ட கண்ணீர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இராமநாதபுரம் மாவட்டத் தைச் சேர்ந்த பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா என்கிற தி.மு.க. தொண்டர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் தன் நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்துவதாகக் கோயிலில் வேண்டிக்கொண்டதோடு அதை நிறைவேற்றியதாகவும் செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன்.
தமிழக மக்கள் ஒரு துளி இரத்தம்கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதி களை முன்வைத்தோம். நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகச் சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை பற்றிக் கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக் கொள்ளாதீர்கள். அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் இதைப் போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச் செய்திட கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள் கிறேன். உங்கள் புன்னகையில் தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது.
வனிதா என்ற சகோதரி விரை வில் உடல்நலம் பெற்று இயல்பு வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகி றேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related posts

சிவாஜி நினைவு நாளில் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம்

Jai Chandran

Nani is reuniting with director Srikanth

Jai Chandran

அமெரிக்காவிலிருந்து வைரமுத்துவிடம் பேசினார் ரஜினிகாந்த்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend