இன்று காலை முதல் இணைய தளங்களில் அம்மா உணவ கத்தில் புகுந்த சிலர் அங்கிருந்த அம்மா உணவக பெயர்பலகையை நீக்கி ரோட்டில் வீசி எறிந்த வீடியோ காட்சிகள் வெளி யானது. இதுகுறித்து கருத்து பதிவிட்ட பலரும் சம்பந்தப் பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டனர்.
சென்னை மதுரவாயல் பகுதி யில் இந்த சம்பவம் நடந் துள்ளது தெரியவந்தது. திமுகவை சேர்ந்த இருவர் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் உடனடியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலி னுக்கு சென்றது. உடனடியாக சம்பந்தப்பட்ட இருவரையும் திமுகவிலிருந்து நீக்கியதுடன் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கூறி உள்ளார்.
previous post