சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகி றார். இதுகுறித்து விஜயகாந்த் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில்,’சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் உழைத்த அனை வருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்க வுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் & வெற்றி பெற்ற அனைவருக் கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட் டிருந்தார்.
இந்நிலையில் திமுக வேட்பா ளராக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற உதயநிதிஸ்டாலின் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு இன்று நேரில் சென்று அவரிடம் வெற்றிபெற்றதற்கான ஆசி பெற்றார். அத்துடன் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.
விஜயகாந்த்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்த புகைப்படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது.