படம்: காக்டெயில்
நடிப்பு: யோகிபாபு,கவின். மிதுன் மகேஸ்வரன், ஷாயாஜிஷிண்டே, பாலா, ராஷ்மி கோபிநாத்,
தயாரிப்பு: பிஜி மீடியா ஒர்க்ஸ்
இசை: சாய் பாஸ்கர்
ஒளிப்பதிவு: ரவீன்
இயக்கம்: ரா.விஜயமுருகன்
ரிலீஸ்: ஜீ5 (ஒடிடி)
படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகி வந்த நிலை மாறி அதே பப்ளிசிட்டியுடன் ஒடிடி தளங்களில் ரிலீஸ் ஆகத் தொடங்கி இருக் கிறது. ஆனால் எந்த தளத்தில் ரிலீஸ் ஆகியிருக்கிறது என்பது ஒடிடி தளத்தில் படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு மட்டுமே தெரியும் , மற்ற சாதாரண ரசிகர்களுக்கு ஒடிடி யா என்று கேட்கும் நிலைதான் உள்ளது. ஏற்கனவே பொன்மகள் வந்தாள். பெண்குயின் என இரண்டு படங்கள் ஒடிடியில் ரிலீஸ் ஆனது. அதற்கு பப்ளிசிட்டியும் நன்றாகவே இருந்தது. ஆனால் ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது தியேட்டரில் பார்க்கும் எபெக்ட் இல்லை என்ற பேச்சே வந்து நின்றது.
காக்டெயில் படத்தையும் திரில்லர், பிளஸ் காமெடி என்ற பாணியில் ஸ்கிரிபட் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். ஆனால் அது போதுமானதாக இல்லை. சலூன் கடை நடத்தும் யோகிபாபுவுக்கு கவின், மிதுன். பாலா என 3 நண்பர்கள். மிதுனுக்கு திருமணம் நிச்சயமாகிறது. அதை கொண்டாட தனது வீட்டில் நண்பர்களுக்கு காக்டெயில் பார்ட்டி தருகிறார். ஃபுல்லாக குடித்துவிட்டு அனைவரும் மட்டையாகிறார்கள். காலையில் எழுந்து பார்க்கும்போது அங்கு ஒரு பெண் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். வம்பில் சிக்கிக்கொள்வோமோ என்று பயப்படும் அவர்கள் பிணத்தை யாருக்கும் தெரியா மல் மறைக்க முயல்கின்றனர். முன்னதாக சோழர்கால ஐம்பொன் முருகர் சிலை ஒன்று காணாமல் போனதால் அதை போலீஸ் தீவிரமாக தேடுகிறது. இதற்கிடையில் மிதுன் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் தந்தை சாயாஜி ஷிண்டே ஒரு போலீஸ் அதிகாரி. முருகர் சிலை, காணாமல்போன் பெண் இரண்டு வழக்கையுக் அவர்தான் கையாள்கிறார். காரில் பெண் பிணத்தை மறைக்க எடுத்து செல்லும் யோகி மற்றும் மிதுன் கூட்டம் ஷாயாஷி ஷிண்டேவிடம் சிக்குகிறதா? காணாமல் போன் ஐம்பொன் சிலையை கண்டுபிடிக்க போலீஸ் செய்யும் தந்திரம் என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.
யோகிபாபு என்றதும் படம் முழுக்க காமெடி கலை கட்டப்போகிறது என்ற எதிர்ப்புடன் அமர்ந்தால் ஒன்றிரண்டு தவிர எல்லாமே நமத்துபோன பட்டா ஸாக புஷ் ஆகிறது. யோகிபாபுவும் மற்ற 3 ஹீரோக்களும் டிவியில் வந்தவர்கள்தான் டிவி டிராமா பார்க்கும் உணர்வு வந்து விடக்கூடாது என்பதற்காக பலவித சமரசங்களை இயக்குனர் செய்து அந்த உணர்வை மாற்றியிருந்தாலும் படத்தை பெரிய திரையில் பார்க்க முடியாமல் டிவி அல்லது செல்போனில் பார்ப்பதால் டிவி நடிகர்கள் என்ற இமேஜ்தான் மனதில் பதிகிறது. முழுக்க யோகிபாபுவின் காமெடி பலத்தை நம்பியே காட்சிகளை நகர்த்தினாலும் அவரால் டயலாக் காமெடி பஞ்ச் தான் தர முடிகிறது ஆக்ஷன் காமெடிக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.
கதை நண்பர்களை சுற்றியே நடப்பதால் ஹீரோயின்களுக்கு வேலைஇல்லை ஊறுகாய்போல் ஒரு ஒரமாக ஒதுங்கி விடுகிறார்கள். கதையில் இன்னும் அழுத்தமான திருப்பங்களுடன் கொஞ்சம் சீரியஸ்னெஸ். சென்டிமென்ட்டையும் சேர்த்திருந்தால் ரசித்திருக்கலாம்.
லிமிடெட் ஸ்கிரீன், லிமிட்டெ ஸ்பீக்கர் சவுண்ட் என்பதால் ஒளிப்பதிவு, இசை இரண்டின் அளவையும் துல்லியமாக கணிக்க முடியவில்லை.
’காக்டெயில்’ வெறும் வாய்க்கு மெல்ல அவல் கிடைத்திருக்கிறது.