உலக அழகி ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா என்றால் நம்பமுடிகிறதா. நிஜம்தான். அவர், அவரது கணவர், குழந்தை, மாமனாருக்கு கொரோனா தொற்று பீடித்திருக்கிறது.
நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இருவரும் மும்பை மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்
டிருக்கின்றனர். ஆனால் ஐஸ்வர்யாராய் அவரது மகள் ஆராத்யா, ஜெயாபச்சன் ஆகியோருக்கு தொற்று இல்லை என்று காலையில் வெளியிடப்பட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாலையில் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் ஐஸ்வர்யாராய் மற்றும் மகள் ஆராத்யா வுக்கு கொரோனா இருப்பது உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பாலிவுட் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இந்த தகவலை மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் டிவிட்டரில் உறுதி செய்திருக்கிறார். ’ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுக்கு கொரோனா தொற்றுஇருப்பது தற்போது உறுதியாகி உள்ளது. ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை’ என அவர் தெரிவித்திருக்கிறார்.
next post