Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், ‘டிராகன்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவருமான வி ஜே சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கும் ‘டயங்கரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

நடிகரும், அறிமுக இயக்குநருமான வி ஜே சித்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் வி ஜே சித்து, நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், ‘ஆதித்யா’ கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டுள்ளார். ஏ. கீர்த்தி வாசன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சமகால இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டயங்கரம்’ திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்குகிறது. மேலும், படத்தின் இசையை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.

இன்றைய இளைஞர்களின் துடிப்பான ஆற்றல், காமெடி, எமோசன் மற்றும் சுய அடையாளத்தை கண்டுபிடிக்கும் பயணம் ஆகியவற்றை மையப்படுத்திய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக ‘டயங்கரம்’ உருவாகியுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் டீசர், இசை மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

புதுமுகங்களின் காதல் கதையில் கே.பாக்யராஜ்

Jai Chandran

நடிகர் ஷாம் தடுப்பூசி போட்டுக்கொண்டார்

Jai Chandran

வர்மா படத்தில் கவர்ச்சியில் கதறவிட்ட ஆராத்யா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend