Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஜான்விக் – சாப்டர் 4 (ஆங்கில பட விமர்சனம்)

படம்: ஜான்விக் – சாப்டர் 4

நடிப்பு: கேனு ரீவெஸ், டோன்னி யென், பில் ஸ்கார்ஸ்கார்ட், லாரன்ஸ் ப்ஷ்பர்நே

தயாரிப்பு: சம்மிட் என்டர்டெயின்மெண்ட்

இசை: டைலர் பேட்ஸ்

இயக்கம்: சாட் ஸ்டாஹால்ஸ்கி

ஹைடேபிள் சீனியர் அதிகாரி யின் தயவில் தலைமறைவாக இருப்பவரை பழி வாங்க நியூயார்க் சிட்டிக்கு வருகிறார் ஜான் விக். திட்டமிட்டபடி அவனை ஜான் விக் கொல்கிறார். இதையறிந்து அதிர்ச்சி அடைய சீனியர் அதிகாரி ஜான் விக்கை கொல்ல தனது மானேஜர் மூலமாக கொலையாளியை ஏற்பாடு செய்கி றார். அவரோ ஜான் விக்கின் பழைய நண்பர். ஆனால் தன் மகளின் உயிரை காப்பாற்று வதற்காக ஜான் விக்கை கொல்ல சம்மதிக்கிறார். இதுதவிர ஜான் விக்கை கொள்ப வர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசு அறிவிக்கப் படுகிறது. அவர்க ளிடமிருந்து ஜான் விக்கால் தப்ப முடிந்ததா என்று விறுவிறுப்பாக பதில் அளிக்கிறது.

ஜான் விக் 4ம் பாகமாக இப்படம் உருவாகியிருக்கிறது. ஜான்விக் வேடத் தில் நடத்திருக்கும் கேன் ரிவீஸ் அதிரடி ஆக்ஷன் படம் முழுவதும் வேகத்தை கூட்டுகிறது. பார்வையற்றவராக வரும் அவரது நண்பருடன் மோதும் காட்சி களும் அரங்கை அலறவிடுகிறது.

ஜான்விக்கை கொல்ல கூட்டம் கூட்டமாக துரத்தும் ரவுடிகளை அந்தர் செய்யும் காட்சி களும், கார் சேசிங் காட்சிகளும் ஹாலி வுட் படம்ன்னா ஹாலிவுட் படம்தான் என சொல்ல வைக் கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் ஜான்விக் அவரது நண்பர் நேருக்கு நேர் துப்பாக்கி யால் சுட்டுக் கொல் லும் காட்சி த்ரில்.

ஜான் விக் – ஆக்ஷன் ஆக்ஷன் ஆக்ஷன்

Related posts

VigneshShivN met Minister Anuragthakur

Jai Chandran

Hip Hop Tamizha to play lead in Ishari K Ganesh’s new film

Jai Chandran

வீரபாண்டியபுரம் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend