படம்: மார்க் ஆண்டனி
நடிப்பு: விஷால். எஸ். ஜே.சூர்யா, ரிது வர்மா, அபிநயா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஓய்.ஜி.மகேந் திரன்,
தயாரிப்பு: எஸ்.வினோத்குமார்
இசை: ஜி. வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: நந்தன் ராமானுஜம்
இயக்கம்: ஆதிக் ரவிச்சந்திரன்
பி ஆர் ஓ: ரியாஸ் அஹமத்
விஞ்ஞானி செல்வராகவன் கடந்த காலத்துக்கு சென்று அவர்களுடன் பேசி நடந்த சம்பவங்களை மாற்றும் சக்தி கொண்ட டைம் மிஷினை கண்டுபிடிக்கிறார். அந்த மிஷின் ஒரு கட்டத்தில் மெக்கானிக் மார்க் ( விஷால்) கையில்.கிடைக்க அவர் தன் தாயை கொலை செய்த தன் தந்தையை திட்டி தீர்க்க டைம் மிஷின் போன் மூலம் தொடர்பு கொள்கிறார். அப்போதுதான் தன் தந்தை ஆண்டனி (விஷால்) நல்லவர் என்று தெரிய வருகிறது. அவரை மீண்டும் உயிருடன் வர வழைக்க முயல்கிறார். இந்நிலை யில் அந்த மிஷின் ஜாக்கியின் மகன் கையில்.கிடைக்க அவரும் இறந்த தனது தந்தை ஜாக்கியை (எஸ். ஜே.சூர்யா) உயிருடன் வரவழைக்கிறார். எல்லோரும் ஒரே காலகட்டத்தில் இணைகின்றனர். ஆண்டனியும், ஜாக்கியும் மீண்டும் சந்திக்கும்போது பூகம்பம் வெடிக் கிறது. இதன் முடிவு என்ன என்பதை கிளைமாக்ஸ் சொல் கிறது.
டைம் மிஷின் படம் என்றாலே ஆவலோடு பார்க்கும் படமாக இருக்கும். அந்த ஆர்வம் இந்த படத் தொடக்க காட்சிகளில் ஏற்படு கிறது . விஷாலுடன் டைம் மிஷின் கிடைத்ததும் அவர் தன் தந்தை ஆண்டனிக்கு போன் செய்து பேசி திட்ட முயலும்போது அவரது மிரட்டலுக்கு பயந்து போனை வைப்பது காமெடி.
ஆண்டனியாக வரும் விஷால் நடிப்பில் பொளந்துகட்டுகிறார். கிளைமாக்சில் மொட்டை அடித்து தலையை ஆட்டிக்கொண்டு டிரக்கில் அனகொண்டா துப்பாக்கி எடுத்து வந்து ரவுடி கூட்டத்தை சுட்டுத் தள்ளுவது பான் இந்தியா ஃபைட்.
விஷாலின் நண்பனாகவும் வில்லனாகவும் வரும் எஸ்.ஜே. சூர்யா நிஜமாகவே நடிப்பு அரக்கன்தான் உச்சகட்டமாக நடித்து அரங்கை அலற விடுகிறார்.
சுனில், ரெடின் கிங்ஸ்லி செல்வ ராகவன், ரிது , அபிநயா, .ஓய்.ஜி. மகேந்திரன் ஊறுகாயாக பயன் பட்டிருக்கின்றனர்.
படத்தில் வரும் சில்க் ஸ்மிதா உயிருடன் வரும் காட்சி அவரைப் பார்த்து எஸ். ஜே.சூர்யா குத்தாட்டம் போடும் கூத்து அரங்கை அலறவிடுகிறது.
படத்தில் யார், யார் எந்த காலகட்டத்தில் வருகிறார்கள் என்ற குழப்பத்தை எல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்தால் படத்தை ரசிக்க முடியாது. ஒரு கனவு போல் என்ஜாய் செய்தால் தான் தப்பித்தோம், இல்லா விட்டால் மண்டைக்குள் மோட்டார் ஓடத் தொடங்கி விடும்.
எஸ்.வினோத்குமார் தயாரித்திருக் கிறார். டைமிங் மிஷினில் ஹை ஓல்டேஜ் வைத்திருக்கிறார் இயக் குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இடை வேளைக்கு முன்பு வரை ஓரளவுக்கு நம்பினாலும் அதன் பிறகு வரும் காட்சிகள் இரண்டு கால கட்டமும் ஒன்றாகிவிடுவது கிளைமாக்ஸ் காட்சிக்காக காம்ப்ரமைஸ் செய்யப்பட்டது போல் இருக்கிறது.
ஜி வி பிரகாஷ் இசை தொடக்கம் முதல் இறுதி வரை ஓயவே இல்லை. அரங்கை அதிர வைக் கிறது.
நந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் கலர் டோனில் வித்தியாசம் காட்டி யிருந்தால் எந்த கால கட்ட காட்சி என்ற வித்தியாசம் புரிந்திருக்கும். காட்சிகளை எடிட்டிங் செய்தபோது என்னவெல்லாம் பாடுபட்டார் என்பதை எடிட்டர் விஜய் வேலு குட்டி சொன்னால்தான் தெரியும்.
மார்க் ஆண்டனி – டைம் மிஷின் டைனமைட்