Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அனந்தா (பட விமர்சனம்)

படம்: அனந்தா

நடிப்பு: ஜெகபதி பாபு, நிழல்கள் ரவி, சுகாசினி, ஒய் ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய்

தயாரிப்பு: க்ரிஷ் கிருஷ்ணமூர்த்தி

இசை: தேவா

இயக்கம்: சுரேஷ் கிருஷ்ணா

பிஆர்ஓ: ரியாஸ் கே அஹமத், பாரஸ் ரியாஸ்

புட்டபர்த்தி சாய்பாபாவின் அற்புதங்களை சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது அனந்தா.

கதை: புட்டபர்த்தி ஆசிரமத்தில் இருந்து ஐந்து பக்தர்களுக்கு அழைப்பு வருகிறது. அவர்கள் ஆசிரமத்துக்கு வருகிறார்கள். அங்குள்ள மேலாளர் அவர்களை வரவேற்று “பாபா உங்களை இங்கு வரவழைத்திருக்கிறார். உங்கள் வாழ்வில் பாபா நிகழ்த்திய அற்புதங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்கிறார். அவர்கள் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
சுகாசினி பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் அடைகிறார். ஒரு கட்டத்தில் அந்த குழந்தைக்கு உயிர் பிரச்சனை ஏற்படுகிறது அதேபோல் தொழிலதிபர் ஜெகபதி பாபுக்கு வாழ்வில் எப்படி திருப்பம் கிடைத்தது, ஒய் ஜி மகேந்திரன் தனது மனைவியை பறிகொடுத்தபோது நடந்த சம்பவம் என்ன, நாட்டியத்தில் சிறந்து விளங்கும் நடனப் பெண்ணுக்கு நடந்த அதிசயம் என்ன உள்ளிட்ட ஐந்து முக்கிய சம்பவங்கள் படத்தில் இடம்பெற்று இருக்கிறது.

காட்சிகள் எல்லாமே பாபா பக்தர்களை கவரும் காட்சிகளாக மட்டுமல்லாமல்,
சாய்பாபாவின் சக்தியை உணர்த்தும் காட்சிகளாக படமாக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் சாய்பாபா பக்தர்களுக்கு நேரில் காட்சியளித்த ஆசிரம
காட்சிகளும் கதையோடு இணைக்கப்பட்டிருப்பது சரியாக பொருந்தியிருக்கிறது.

புட்டபர்த்தி ஆசிரமத்துக்கு செல்லாதவர்கள் கூட அவரது பக்தர்களாக மாற்றும் விதத்தில் காட்சிகள் மனதை தொடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது
கிளைமாக்சில் எல்லா மதத்தையும் சேர்ந்தவர்களுமே சாய்பாபாவின் பக்தர்களாக முடியும் என்பதை உணர்த்தி இருப்பது ஏற்கத்தக்க வகையில் உள்ளது.

சாய்பாபாவின் பக்தர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி படத்தை தயாரித்திருக்கிறார்.

பாட்ஷா பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை பக்தி பரவசத்துடன் இயக்க
பக்தி மனம் கமழ இசையமைத்திருக்கிறார் தேவா.

ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகி இருக்கிறது

அனந்தா – புட்டபர்த்தி சாய்பாபாவின் அற்புதங்கள் சொல்லும் படம்.

Review By
K Jatachabdhiran

trending cinemas now.com

Related posts

வைரமுத்து பற்றி பாரதிராஜா பெருமிதம்

Jai Chandran

Prime Minister Using AA23 Theme…

Jai Chandran

பத்திரிகை, ஊடகம், போலீசாருக்கு இயக்குனர் விக்ரமன் வேண்டுகோள்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend