படம்: டெடி
நடிப்பு: ஆர்யா, சாயிஷா, மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ்,
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: யுவா
இயக்கம்: சக்தி சவுந்திரராஜன்
ரிலீஸ்: டிஸ்னி பிளஸ்ஹாட்ஸ்டார் விஐபி (ஒடிடி தளம்)
டெடி டெடி என்று இணைய தளம் முழுக்க மாஸ் பப்ளி சிட்டியாக வலம் வந்துக் கொண்டிருந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டது.
மூக்குக்கண்ணாடி போட்டுக் கொண்டு அப்பாவிபோல் அமைதியாக இருந்தாலும் அதிபுத்திசாலி ஆர்யா. எதை யும் எளிதில் தெரிந்துக் கொள் வார். ஒருமுறை கல்லூரிக்கு சென்ற சாயிஷா ஒரு கும்பல் கடத்தி அவருக்கு அதிக மாத்தி ரைகள் கொடுக்கிறது. இதில் கோமா நிலைக்கு சென்றுவிடு கிறார். அவரை அந்த கூட்டம் தூக்கிச் செல்கிறது. ஆனால் சாயிஷாவின் உயிர் அங்கிருக் கும் டெடி பொம்பைக்குள் நுழைந்து விடுகிறது. அந்த பொம்மை ஆர்யவை சந்தித்து நடந்த சம்பவத்தை கூறுவது டன் தனது உடல் எங்கிருக் கிறது என்று கண்டுபிடிக்கக் கேட்கிறது. அதைக்கேட்டு ஷாக்கான ஆர்யா டெடியுடன் சேர்ந்து சாயிஷாவின் உடலை எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவரால் கண்டு பிடிக்க முடிந்ததா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
ஏதோ, டெடி பொம்மையை வைத்து வித்தை காட்டப்போ கிறார்கள் என்று பார்த்தால் அதற்குள் ஒரு உயிரை ஒளித்து வைத்து கதைக்கு உயிர் கொடுத்து வித்தியாமான பேன்டஸி உலகத்துக்கு ரசிகர் களை அழைத்துச் செல்கிறார் இயக்குனர் சக்தி சவுந்திர ராஜன். ஏற்கனவே டிக் டிக் டிக், மிருதன் என தமிழுக்கு இரண்டு மாறுபட்ட படைப் புகளை தந்த இயக்குனர் என்பதால் இதையும் வித்தியா சமான கோணத்துடன் நம்பி பார்க்க முடிகிறது. ஆவி கதை, பேய் கதை என்று ஆக்ரோஷ மாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாமல் உயிர் ஒன்று தன் உடலை தேடும் கதையாக மாற்றி நிமிர வைக்கிறார்.
ஆர்யாவை பார்த்தால் அப்பா வியாக தெரிகிறார் ஆனால் அவர் அடிக்கும் அடி ஒவ்வொன்றும் இடியாக மாறி ஆக்ஷன் காட்சிகளில் கதற விட்டிருக்கிறார். சாயிஷாவின் உடலை தேடி டெடியுடன் ஆர்யா மேற்கொள்ளும் பயணம் ரசிகர்களின் கரங்க ளையும் கைகோர்த்துக் கொண்டு பயணிக்கிறது. ஆர்யாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக் கிறாரோ அதே அளவுக்கு டெடி பொம்பைக்கும் முக்கியத்துவமும் அதன் அனிமேஷன் காட்சி அசைவு களுக்கும் கொடுத்திருப்பது நிஜமாகவே அந்த பொம் மைக்கு உயிர் இருக்குமா என்று குழந்தைகளுக்கு சந்தேகத்தை வரவழைத்து விடுகிறது.
சாயிஷாவுக்கு குறைந்த வேடம் தான் என்றாலும் அவர் உருவம்தான் இல்லை என்ற குறையே தவிர அவர் உயிர் டெடி உருவில் நடமாடுகிறது என்ற உள்ளுணர்வில் சாயிஷா ஞாபகம் மறந்துபோக வில் லை.
படத்தில் பலர் நடித்திருந் தாலும் ஞாபகத்தில் நிற்பது ஆர்யா, சாயிஷா, டெடி பாத்திரங்கள்தான். ஏற்கனவே ஒன்றிரண்டு படங்களில் இயக் குனர் கவுதம்மேனன் ஸ்டை லாக நடித்து பெயர்பெற்றி ருக்கும் நிலையில் இப்படத் தில் இயக்குனர் மகிழ் திருமேனி வில்லனாக நடித்து ஸ்டைலிஷ் நடிகர் என்ற பெயரை பெறுகிறார். கருணா கரன், சதீஷ் தங்கள் பங்கை அளித்திருக்கிறார்கள்.
டி.இமான் இசை வழக்கம் போல் இனிக்கிறது. யுவாவின் கேமிரா டெடியை காட்சிக்கு கொண்டு வரும் நடைமுறை யில் கவனமாக செயல்பட்டி ருக்கிறது. கலர்புல்லாக காட்சி களை காட்டி கண்களுக்குள் வண்ண மத்தாப்பு மழை படர விடுகிறார். குழந்தைகளை கவரும் படங்கள் வருவதில் லையே என்ற பலரது ஏக்கத் துக்கு இப்படம் பதில் அளித் திருக் கிறது.
டெடி பொம்பை குழந்தை களை கவர்ந்தால், ஆர்யா இளைஞர்களை கவர்கிறார்.
டெடி-ஒரு வித்தியாச அனுபவம்.